×

நாகூர் குயவர் தெருவில் திரவுபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் குயவர் தெருவில் திரவுபதி அம்மன் கோயில் உள்ளது. இங்கு விநாயகர், முருகன், சப்தகன்னிமார்கள், முத்தால்ராவுத்தர், அரவாள், பச்சைக்காளி மற்றும் பவளக்காளி, நாகக்கன்னி, கமலக்கன்னி, கிருஷ்ணர், சுபத்ராதேவி, அர்ச்சுணன், அகோரவிரபத்தரர், கொடிமர விநாயகர் ஆகிய பரிவார தெய்வங்கள் உள்ளது. இவ்வாறு புகழ்பெற்ற திரவுபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 19ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை ஆகியவை நடந்தது. தொடர்ந்து 20ம் தேதி இரவு முதல் கால யாகசாலை பூஜையும், 21ம் தேதி வீரகணபதி பூஜை யுடன் இரண்டாம் கால யாகசாலை பூஜையும் இரவு மூன்றாம் கால பூஜையும் நடந்தது. நேற்று காலை 4ம் கால பூஜையுடன் கடம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகமும் பின்னர் விமான கும்பாபிஷேகமும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

The post நாகூர் குயவர் தெருவில் திரவுபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Draupadi Amman Temple Kumbabhishekam ,Potter Street, Nagore ,Nagapattinam ,Draupathi Amman Temple ,Nagore Kuyavar Street ,Vinayagar ,Murugan ,Sapthakannimars ,Mutalrauthar ,Araval ,Pachakali ,Pavalkali ,Nagakanni ,Kamalakanni ,Krishna ,Subhadratevi ,Arjuna ,Agoravirabhattar ,Kodimara ,
× RELATED நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி...