×

விசைப்படகில் இருந்து கடலில் விழுந்தார் மாயமான மீனவரை கண்டுபிடிக்க வேண்டும் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை

கருங்கல், ஜன. 24: கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராஜேஷ் குமார் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர், ஆணையர், நிர்வாக இயக்குனர், அரசு கூடுதல் தலைமை செயலாளர், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது, கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, தூத்தூர், சின்னத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த பிரேசில் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் தேங்காப்பட்டணம் பகுதியை சேர்ந்த அபு பக்கர் என்பவரின் மகன் ஜலாலுதீன்(42), சந்திரன் உட்பட 11 மீனவர்கள் கடந்த 14 ம் தேதி தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகில் மீன்பிடிக்க கடலுக்குசென்றனர். 21-01-2024 அன்று 40 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருக்கும் போது ஜலாலுதீன் விசைப்படகில் இருந்து கடலுக்குள் தவறி விழுந்துள்ளார். சக மீனவர்கள் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் ஜலாலுதீன் கடலில் காணாமல் போன தகவலை சக மீனவர்கள் அவரது வீட்டிற்கு தெரிவித்தனர். இதனால் அவரது குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

The post விசைப்படகில் இருந்து கடலில் விழுந்தார் மாயமான மீனவரை கண்டுபிடிக்க வேண்டும் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Rajesh Kumar ,MLA ,Karungal ,Gilliyur Assembly Constituency ,Tamil Nadu ,Chief Minister ,Minister ,Fisheries ,Fishermen Welfare and ,Animal ,Husbandry ,Kanyakumari District Govt ,Dinakaran ,
× RELATED கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட...