×

அதிமுக பைல்ஸா? அது வந்து… ‘ஜகா’ வாங்கிய அண்ணாமலை

திருச்சி: ‘அதிமுக பைல்சா? நீங்க வெளியிடுங்க…’ என்று பத்திரிகையாளர்களிடம் கூறிபிட்டு அண்ணாமலை எஸ்கேப்பானார். திருச்சி விமான நிலையத்தில் தமிழக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நேற்று அளித்த பேட்டி: அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி வாயில் வந்ததை எல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார். அவருடைய அரசியல் பக்குவத்திற்கும், அவர் கட்சியில் வகிக்க கூடிய பொறுப்புக்கும், வார்த்தைக்கும் சம்மதம் இல்லை. கே.பி. முனுசாமிக்கு அண்ணாமலை மீது தான் வன்மம். அதிமுகவிற்கு ஒரே ஒரு எம்ஜிஆர் இருந்தது போல், காங்கிரஸ் கட்சிக்கு ஒரே ஒரு காமராஜர் இருந்தது போல், பாஜவிற்கு ஒரே ஒரு மோடி தான். அண்ணாமலையை போல் ஆயிரம் பேர் இருக்கிறார்கள். ஆனால் மோடியை போல் இன்னொருவரை உருவாக்க முடியாது. அதை கே.பி.முனுசாமி புரிந்து கொண்டு பேச வேண்டும். என்னை விமர்சனம் செய்பவர்களுக்கு என் மீது வன்மம் தான் அதிகம் உள்ளது. பாஜ மீது கோபம் இருக்கிறது என்பதை விட அண்ணாமலை மீது தனிப்பட்ட வன்மம் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அதிமுக பைல்ஸை எப்போது வெளியிடுவீர்கள் என்று நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அண்ணாமலை, அதிமுகவை பற்றி எதுவும் வாய் திறக்காமல் மலுப்பலாக, ‘நீங்கள் கேட்ட கேள்வி ஒரு நல்ல கேள்வி. நீங்கள் ஏன் அதை செய்யவில்லை’ என்று கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் புறப்பட்டு சென்றுவிட்டார். முன்னதாக சென்னை தாம்பரத்தில் அண்ணாமலை கூறுகையில், ‘அண்ணாமலையையும், பாஜவையும் பற்றி பேசினால் பிரபலமாகிவிடலாம் என சிலர் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். மார்க்கெட்டில் இல்லாத நடிகர்கள், இயக்குநர்கள் பற்றி நாங்கள் பேசி அவர்களது மார்க்கெட்டை ஏற்ற விரும்பவில்லை. என் வீட்டில் நான் விளக்கு ஏற்றுகின்றேன் அவர் வீட்டில் அவர் விளக்கு ஏற்றவில்லை என்றால் அது அவருடைய பிரச்னை. இயக்குநர் ரஞ்சித் கனவில் வந்த கருத்துக்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

* ராமர் கோயில் எப்போ திறந்தாங்கனு கூட தெரியல…

திருவிடைமருதூர் தாலுகா திருப்புவனம் சன்னதி தெருவில் அண்ணாமலை நேற்று நடைபயணத்தில் பேசுகையில், ராமர் கோயில் ஜன.12ம் தேதி திறக்கப்பட்டது என்று தெரிவித்தார். நேற்று முன்தினம்தான் (ஜன.22ம் தேதி) ராமர் கோயில் திறக்கப்பட்டது. நேற்று நடைபயணத்தில் பேசும்போது, ஜன.12ம் தேதி என்று அண்ணாமலை பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோயில் திறந்த மறுநாளே அண்ணாமலை தேதியை மாற்றி கூறியது நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

The post அதிமுக பைல்ஸா? அது வந்து… ‘ஜகா’ வாங்கிய அண்ணாமலை appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Annamalai ,Jaga ,Trichy ,ADMK Bayelsa ,Tamil Nadu ,BJP ,State ,President ,Trichy Airport ,Deputy General Secretary ,KP Munuswamy ,Dinakaran ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...