×

ஆளுநரின் நிகழ்ச்சிக்கு வந்தால்தான் அட்டென்டன்ஸ்: துணைவேந்தர் வேல்ராஜ் விளக்கம்

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேதாஜி பிறந்தநாள் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். இதில் பல்கலைக்கழகத்தின் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங், தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடப்பிரிவை சேர்ந்த இளநிலை 3, 4ம் ஆண்டு மாணவர்கள் பங்கேற்கவும், அரங்கில் மாணவர்களுக்கான வருகைப் பதிவு எடுக்கப்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது ஏன் என்பது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: 400 மாணவர்கள் பங்கேற்கும் வகையில், அவர்களுக்கு 2 மணி நேரம் பாட வகுப்புகளை ரத்து செய்து, வரவழைத்தோம். மாணவர்களுக்கு நாட்டுப்பற்றை எடுத்து சொல்ல இந்த நிகழ்ச்சி உறுதுணையாக இருக்கும். இதில் எந்த தவறும் இல்லை. இடம் அதிகம் இருந்திருந்தால் அனைத்து மாணவர்களையும் அழைத்திருப்போம். இதுபோன்ற நிகழ்ச்சிகள் அதிகம் நடத்தப்பட வேண்டும். வருகைப்பதிவை நிகழ்ச்சியில் எடுத்தால்தான், அவர்கள் வந்தது உறுதி செய்யப்படும். இல்லையென்றால், இதை பயன்படுத்தி அவர்கள் வேறு எங்கேயாவது செல்வார்கள். இதுவும் ஒரு கற்பித்தல் நிகழ்ச்சிதான். இவ்வாறு அவர் கூறினார். அண்ணா பல்கலை துணை வேந்தரின் இந்த கருத்துக்கு கல்வியாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

The post ஆளுநரின் நிகழ்ச்சிக்கு வந்தால்தான் அட்டென்டன்ஸ்: துணைவேந்தர் வேல்ராஜ் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Vice ,Chancellor ,Velraj ,CHENNAI ,Netaji ,Anna University ,Governor RN Ravi ,University's Electronics ,Engineering ,
× RELATED மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் ராஜினாமா ஏற்பு