×

உயர்கல்வித்துறை சார்பில் ரூ.96.75 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கல்வி சார் கட்டிடங்கள் திறப்பு

சென்னை: தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களை தொடங்குதல், அதன் வாயிலாக ஆராய்ச்சி, புதுமைப்படைப்புகள், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் மாணவர்களின் திறன்களை வளர்த்து, வேலைவாய்ப்பை உறுதி செய்தல், திறன்மிகு இளைஞர்களை உருவாக்குதல், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்த மாணவிகள் உயர்கல்வி பயில புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 உதவித் தொகை, முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு சலுகைகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருவதால் அகில இந்திய அளவில் உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது.

இதுவரை உயர்கல்வித் துறை சார்பில் ரூ.545 கோடி மதிப்பீட்டிலான வகுப்பறைகள், ஆய்வகங்கள், விடுதிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உயர்கல்வித் துறை சார்பில், திருவள்ளூர் மாவட்டம், செவ்வாப்பேட்டை கிராமத்தில் அரசு பல வகை தொழில்நுட்பக் கல்லூரியில் ரூ.4 கோடியே 4 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கலையரங்கம், விருந்தினர் மாளிகை, உடற்பயிற்சிக் கூடம் மற்றும் அணுகு சாலை உட்பட தமிழகம் முழுவதும் ரூ.96.75 கோடிசெலவில் கட்டப்பட்டுள்ள உயர்கல்வித்துறை கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.அமைச்சர்கள் எ.வ.வேலு, ராஜகண்ணப்பன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, உயர்கல்வித் துறை செயலாளர் கார்த்திக், தொழில் நுட்பக்கல்வி ஆணையர் வீர ராகவ ராவ், கல்லூரி கல்வி இயக்குநர் கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post உயர்கல்வித்துறை சார்பில் ரூ.96.75 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கல்வி சார் கட்டிடங்கள் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Higher Education Department ,CHENNAI ,Tamil Nadu ,
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...