×

தொழில் முதலீட்டாளர்களை சந்திக்க முதல்வர் ஜன.27ல் ஸ்பெயின் பயணம்

சென்னை: தமிழகத்தின் பொருளாதாரம் 2030க்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வளர்ச்சியடைவதை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு லட்சிய இலக்காக கொண்டு பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தின் எல்லா பகுதிகளுக்கும் பரவலாக்கப்பட்ட வளர்ச்சியை கொண்டு வர முதலீட்டாளர்களை சந்திப்பதற்கு வரும் 27ம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். மேலும், அங்கு நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்று, தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான சூழ்நிலை பற்றி எடுத்துரைக்கிறார். இந்த பயணம் மூலமாக பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த பயணத்திட்டத்தை முடித்துக்கொண்டு முதல்வர் பிப்.12ம் தேதி சென்னை வந்தடைவார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ஸ்பெயின் பயணத்தை தொடந்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு முதல்வர் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த பயணத்தின் போது தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் தொழில்துறை சார்ந்த முக்கிய அதிகாரிகள் உடன் செல்கின்றனர்.

The post தொழில் முதலீட்டாளர்களை சந்திக்க முதல்வர் ஜன.27ல் ஸ்பெயின் பயணம் appeared first on Dinakaran.

Tags : CM ,Spain ,Chennai ,Chief Minister ,M.K.Stalin ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த...