×

காந்தியை கொச்சைப்படுத்துவதா? ஆளுநருக்கு காங்கிரஸ் கண்டனம்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மகாத்மா காந்தியை கொச்சைப்படுத்துகிற வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்துகளை கூறியிருக்கிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் கடுகளவும் பங்கு வகிக்காமல், ஒரு துரும்பை கூட போடாமல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கைப்பாவைகளாக இருந்தவர்கள் தான் ஆர்.எஸ்.எஸ்., இந்துமகாசபை வழிவந்த பாஜவினர். சுதந்திரம் பெற்று 52 ஆண்டுகள் வரை நாகபுரியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு மறுத்த தேசபக்தியே இல்லாத ஒரு பாசிச இயக்கம் தான் பாஜ என்ற கரைபடிந்த வரலாறை எந்த சக்தியாலும் துடைக்க முடியாது. இதன்மூலம் ஆர்.என்.ரவி போன்றவர்கள் செய்கிற வரலாற்று புரட்டுகளை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post காந்தியை கொச்சைப்படுத்துவதா? ஆளுநருக்கு காங்கிரஸ் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Gandhi ,Congress ,Chennai ,Tamil ,Nadu ,President ,KS Azhagiri ,Governor RN ,Ravi ,Mahatma Gandhi ,
× RELATED இந்திரா காந்தியின் பெருமையை நேற்று...