- சிப்காட்-
- பிள்ளைப்பாக்கம் தொழில் பூங்கா
- தமிழ்நாடு அரசு
- பெரிய தொழில்நுட்ப புரிந்துணர்வு ஒப்பந்தம்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- சென்னை
- சிப்காட்
- Pillaipakkam
- தொழிற்பூங்கா
- மு.கே ஸ்டாலின்
- சென்னை தலைமைச் செயலகம்
- அமெரிக்கா
- சிப்காட்-பிள்ளைப்பாக்கம்
- எலக்ட்ரானிக்ஸ் கண்ணாடி பொருட்கள் தயாரிக்கும் ஆலை
- பெரிய தொழில்நுட்ப நிறுவனம்
- தின மலர்
சென்னை: சிப்காட்- பிள்ளைப்பாக்கம் தொழிற் பூங்காவில், ரூ.1003 கோடி முதலீட்டில் மின்னணு சாதனங்களுக்கான கண்ணாடிப் பொருள் உற்பத்தி தொழிற்சாலை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த கார்னிங் இண்டர்நேஷனல் கார்ப்பரேஷன் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த ஆப்டிமஸ் இன்ப்ராகாம் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் கூட்டு நிறுவனமான பாரத் இன்னோவேட்டிவ் க்ளாஸ் டெக்னாலஜீஸ் பிரைவேட் (பிக் டெக்) நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம், சிப்காட்- பிள்ளைப்பாக்கம் தொழிற் பூங்காவில், ரூ.1003 கோடி முதலீட்டில் 840 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், உலகத்தரம் வாய்ந்த மின்னணு சாதனங்களுக்கான கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை நிறுவுவதற்கு, தமிழ்நாடு அரசின் முதலீடு ஊக்குவிப்பு முகமையான கைடன்ஸ் மற்றும் பிக் டெக் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிறுவனம் நவீன முறையில் முன்-கவர் கண்ணாடி தயாரித்து, இந்தியாவில் உள்ள பேனல் தயாரிப்பாளர்கள், கைபேசி உற்பத்தியாளர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தில் உற்பத்தியாகும் பொருட்கள், நாட்டிலேயே முதன் முறையாக துல்லியமான கண்ணாடி செயலாக்கம் தொழில்நுட்பத்தில் உற்பத்தி செய்யப்பட்டதாக இருக்கும். தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா,தொழில் துறை செயலாளர் அருண் ராய், கைடன்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குநர் விஷ்ணு, ஆப்டிமஸ் இன்ப்ராகாம் நிறுவன தலைவர் மற்றும் பாரத் இன்னோவேட்டிவ் க்ளாஸ் டெக்னாலஜீஸ் நிறுவன இயக்குநர் அசோக் குமார் குப்தா, கார்னிங் இந்தியா நிறுவன மேலாண்மை இயக்குநர் சுதிர் பிள்ளை, பாரத் இன்னோவேட்டிவ் க்ளாஸ் டெக்னாலஜீஸ் நிறுவன இயக்குநர் பாவ்னா சிங்கல், கார்னிங் இந்தியா நிறுவன வணிக இயக்குநர் திவ்யான்சு கவுதம், அரசாங்க விவகாரங்கள் இயக்குநர் அமித் குமார் ஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post சிப்காட்- பிள்ளைப்பாக்கம் தொழிற் பூங்காவில் ரூ.1003 கோடியில் மின்னணு சாதன கண்ணாடிப்பொருள் உற்பத்தி ஆலை: தமிழ்நாடு அரசு – பிக் டெக் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது appeared first on Dinakaran.