×

வயல்வெளிகளில் மேய்ந்த 20 மாடுகள் மேலநத்தம் கோயிலில் அடைப்பு

நெல்லை: நெல்லை அருகே மேலநத்தம் வயல்வெளிகளில் மேய்ந்த 20 மாடுகளை அப்பகுதி மக்கள் பிடித்து அங்குள்ள சிவன் கோயிலில் அடைத்து வைத்தனர். நெல்லை அருகே மேலநத்தம் பகுதியில் 150 ஏக்கரில் விளைநிலங்கள் உள்ளன. அங்குள்ள விவசாயிகள் நெல், வாழை உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையில், இங்குள்ள விளைநிலங்கள் அதிகளவு பாதிக்கப்பட்டன. சில வயல்களில் நெல்மணிகள் வெள்ளத்தில் மூழ்கிவிட்ட நிலையில், விவசாயிகள் கால்நடை தீவனமாக வைக்கோலுக்காக பயிர்களை தொடர்ந்து பராமரித்து வருகின்றனர்.

இந்நிலையில் மேலப்பாளையம் பகுதியில் காணப்படும் தண்டவாளம் வழியாக வெளிவரும் மாடுகள் விளைநிலங்களை மேய்வது வழக்கமாக இருந்துள்ளது. இன்று காலையில் நெல், வாழை வயல்களுக்கு புகுந்த 20 மாடுகள். விளைபயிர்களை நாசமாக்கியுள்ளன. இதையடுத்து மேலநத்தம் பொதுமக்கள் மாடுகளை பிடித்து சிவன் கோயில் வளாகத்தில் அடைத்து வைத்தனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தனர். அதிகாரிகள் விசாரணை நடத்தி மாடுகளை திரியவிட்ட உரிமையாளர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வயல்வெளிகளில் மேய்ந்த 20 மாடுகள் மேலநத்தம் கோயிலில் அடைப்பு appeared first on Dinakaran.

Tags : Melantham temple ,Nellai ,Melanatham ,Shiva temple ,
× RELATED நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில்...