×

அரசியல் சூழ்ச்சிகளால் சேது சமுத்திர திட்டம் முடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எழுதிய 4 நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். உரிமைக்குரல், பாதை மாறா பயணம் உள்ளிட்ட 4 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளது. பின்னர் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்; டி.ஆர்.பாலுவை ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் ஈடுபாட்டுடன் செயல்படுபவர் எனலாம். கொள்கைபிடிப்புடன் இயங்கி வருபவர் டி.ஆர்.பாலு. 12 ஆண்டுகள் ஒன்றிய அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு, 3 முக்கிய துறைகளில் முத்திரை பதித்தார். கலைஞரின் கனவுத் திட்டமான சேது சமுத்திர திட்டம், அரசியல் சூழ்ச்சிகளால் முடக்கப்பட்டது. டி.ஆர்.பாலுவையும் என்னையும் பிரித்து திமுகவின் வரலாற்றை எழுத முடியாது எனவும் கூறினார்.

The post அரசியல் சூழ்ச்சிகளால் சேது சமுத்திர திட்டம் முடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin. ,Chennai ,M. K. Stalin ,DMK ,treasurer ,D. R. Balu ,Mara Yatra ,M.K.Stalin ,D.R. Balu ,Sethu Samudra ,
× RELATED கடந்த மூன்றாண்டுகளில் தொழிலாளர்களின்...