×

காற்றில் மிதக்கும்… பயண நேரம் குறையும்… ஏர் இந்தியாவின் ‘‘ஏர் பஸ் கி 350’’ ரக சொகுசு விமானம் சென்னை வந்தது

மீனம்பாக்கம்: மும்பையில் இருந்து நேற்று காலை 11.25 மணிக்கு ‘‘ஏர் பஸ் கி 350’’ என்ற அதிநவீன ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு பகல் 12.48 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்துக்கு வந்தது. இதன்பின்னர் அந்த விமானம் பிற்பகல் 2.17 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 2.54 மணிக்கு பெங்களூருக்கு சென்றது. இந்த விமானத்தை, ஏர் இந்தியா நிறுவனம் புதிதாக வாங்கியுள்ளது.

350 பயணிகளில் இருந்து 400 பயணிகள் வரை பயணம் செய்யும் வசதி கொண்டது. எரிபொருளை மிகுந்த சிக்கனமாக கையாளும் தன்மையுடையது. விமானம் பறக்கும்போது மிகக் குறைந்த அளவே, கார்பன்டை ஆக்சைடு வெளியேற்றும். இதன்காரணமாக காற்று மாசுபடாததுடன் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது. வானில் பறக்கும்போதும் புறப்படும் போதும் தரையிறங்கும்போதும் அதிக அதிர்வுகளை ஏற்படுத்தாமல், காற்றில் மிதந்தபடி பறந்து செல்லும்.

அதிவேகமாக செல்லக்கூடியது

மும்பை- சென்னை இடையே வழக்கமாக விமான பயண நேரம் 120 நிமிடங்கள். ஆனால் இந்த விமானம் நேற்று 83 நிமிடங்களில் (1 மணி 23 நிமிடங்கள்) மும்பையில் இருந்து சென்னை வந்துள்ளது. சென்னையில் இருந்து பெங்களூரு செல்வதற்கு வழக்கமான பயண நேரம் 70 நிமிடங்கள். ஆனால் இந்த விமானம் நேற்று சென்னையில் இருந்து பெங்களூருக்கு 37 நிமிடங்களில் சென்றடைந்தது.

ஏர் இந்தியா நிறுவனம் வாங்கியுள்ள இந்த அதிநவீன சொகுசு விமானத்தை சோதனை அடிப்படையில், மும்பையில் இருந்து சென்னைக்கும் அதன் பின்பு, பெங்களூருக்கும் இயக்கியதாக கூறப்படுகிறது. இதுபோல் பெரிய ரக அதிநவீன விமானம், சென்னை விமான நிலையத்தில், நேற்று முதல்முறையாக வந்து தரை இறங்கி, புறப்பட்டு சென்றுள்ளது. இந்தியாவில் உள்ள விமான நிறுவனங்களில் முதல்முறையாக ஏர் இந்தியா நிறுவனம், இந்த விமானத்தை இயக்க தொடங்கியுள்ளதாகவும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post காற்றில் மிதக்கும்… பயண நேரம் குறையும்… ஏர் இந்தியாவின் ‘‘ஏர் பஸ் கி 350’’ ரக சொகுசு விமானம் சென்னை வந்தது appeared first on Dinakaran.

Tags : Air India ,Chennai ,Meenambakkam ,Mumbai ,Chennai domestic airport ,
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...