×

ராமர் சிலை பிரதிஷ்டை செய்தது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி.. அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய கருத்து ஏற்புடையது அல்ல: ப.சிதம்பரம்

புதுக்கோட்டை: அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்தது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி என முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள சவேரியார்புரத்தில் தனியார் அறக்கட்டளை ஒன்றின் நூற்றாண்டு விழா மற்றும் அறிவியல் மையம் கட்டடம் தொடக்க விழா உள்ளிட்ட நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம், கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த ப.சிதம்பரம்;

அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்தது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. ஆனால் அதே நேரத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய கருத்து ஏற்புடையது அல்ல என்றும் முழு விவரங்களை தெரியாமல் அவர் கருத்து தெரிவித்திருக்கக் கூடாது என்றும் தெரிவித்தார். மேலும் ராமர் கோயில் குடமுழுக்கு என்பது பாஜகவின் தேர்தல் வாக்குறுதி அல்ல என்றும் அவர் கூறினார்.

ராகுல் காந்தியின் பாதயாத்திரையின்போது அவரை கோவிலுக்குள் நுழைய விடாமல் செய்தது கண்டிக்கத்தக்கது என்றும் அவருடைய பயணம் அமைதியாக மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை அவர் சென்றபோது எந்த வன்முறையும் நடக்கவில்லை என்றும் அசாமில் மட்டும் நடக்கிறது என்றால் பின்புலத்தில் யார் இருக்கிறார்கள் என்பதை விசாரணை செய்ய வேண்டும் என்றும் இதற்கு அந்த மாநிலத்தின் முதல்வர் தான் பொறுப்பு என்றும் கூறினார்.

The post ராமர் சிலை பிரதிஷ்டை செய்தது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி.. அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய கருத்து ஏற்புடையது அல்ல: ப.சிதம்பரம் appeared first on Dinakaran.

Tags : Minister ,Nirmala Sitharaman ,p. ,Chidambaram ,Pudukkottai ,Ramar Temple ,Ayothi ,Union Finance Minister ,P. Chidambaram ,Saveriyarpuram ,Madrumayam, Pudukkottai district ,Ramar ,Dinakaran ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...