×

இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட்: கோஹ்லி இடத்தில் கே.எல்.ராகுல்? ரஜத் படிதாருக்கு வாய்ப்பு

மும்பை : இந்தியா, இங்கிலாந்து அணிக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுதினம் 25ம் தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திடீரென விராட் கோஹ்லி முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவில்லை என்று அணியில் இருந்து விலகிவிட்டார். இதனால் விராட் கோஹ்லி இடத்திற்கு யார் வரப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்திய அணியில் விராட் கோஹ்லி இல்லாத பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

தொடக்க வீரராக ரோஹித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோரும் மூன்றாவது வீரராக கில் ஆடலாம். கோஹ்லி இல்லாத நிலையில் 4வது வீரராக யார் களமிறங்க போகிறார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. சப்ராஸ்கான் அல்லது ரஜத் படிதார் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று பலர் கூறி வருகின்றனர். எனினும் இந்திய அணி கே எல் ராகுலை கோஹ்லி இடத்தில் களமிறக்கி விட்டு ராகுலுக்கு பதிலாக கூடுதலாக ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை பயன்படுத்த ஆலோசித்து வருகிறது. அதன்படி 4வது இடத்தில் கே.எல்.ராகுலும் 5வது இடத்தில் ஸ்ரேயாஸ் அய்யரும் களமிறங்குவார்கள்.

6வது இடத்தில் ஜடேஜாவும் 7வது இடத்தில் கே.எஸ்.பரத் ஆகியோர் விளையாட அதிக வாய்ப்புள்ளது. 8வது இடத்தில் அக்சர் பட்டேலும், 9வது இடத்தில் அஸ்வினும், 10வது இடத்தில் முகமது சிராஜூம், 11வது இடத்தில் பும்ராவும் விளையாட அதிக வாய்ப்புள்ளது. இந்த அணியில் 3 ஸ்பின்னர்கள் மற்றும் 2 வேகப்பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்: ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா, சுப்மன்கில், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், ஜடேஜா, அக்சர் பட்டேல், அஸ்வின், கே.எஸ்.பரத், முகமது சிராஜ், பும்ரா.

The post இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட்: கோஹ்லி இடத்தில் கே.எல்.ராகுல்? ரஜத் படிதாருக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : England ,KL Rahul ,Kohli ,Rajat Patidar ,Mumbai ,India ,Hyderabad ,Virat Kohli ,KL ,Rahul ,Dinakaran ,
× RELATED ஸ்டொய்னிஸ் 124, கெய்க்வாட் 108* ரன் விளாசல் வீண்: சென்னையை வீழ்த்தியது லக்னோ