×

சித்தூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ரூ.4 லட்சம் பெற்றுகொண்டு கிராம வருவாய் துறை அதிகாரி பட்டா வழங்க மறுப்பு

*குடும்பத்துடன் விவசாயி தற்கொலை முயற்சி

சித்தூர் : சித்தூர் மாவட்டம் வி கோட்டா மண்டலம் முகரம் தொட்டி பஞ்சாயத்து சுத்த குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம் இவருடைய மனைவி புவனேஸ்வரி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் சுப்பிரமணி அதே கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக 4 ஏக்கர் 20 சென்ட் அரசு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் விவசாயம் செய்து வந்தார்.இந்நிலையில் அந்த நிலத்தை அவர் பெயருக்கு பட்டா செய்து தர வேண்டும் என கிராம வருவாய் துறை அலுவலகத்தில் மனு வழங்கினார்.

ஆனால் கிராம வருவாய் துறை அதிகாரி ஒரு ஏக்கர் 50 சென்ட் நிலத்தை மட்டும் பட்டா செய்து கொடுத்து மீதி நிலத்தை பட்டா செய்து தர மாட்டேன் இது அரசுக்கு சொந்தமான நிலம் என தெரிவித்துவிட்டார்.இதனால் சுப்பிரமணி கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நான் விவசாயம் செய்து வருகிறேன்.

அது மட்டுமல்லாமல் மா மரங்கள், தென்னை மரங்கள் அனைத்தும் எனது விவசாய நிலத்தில் உள்ளது. ஆகவே நீங்கள் எனக்கு பட்டா செய்து தர வேண்டும் என வற்புறுத்தி உள்ளார்.
ஆனால் சுப்பிரமணியிடம் கிராம வருவாய் துறை அதிகாரி 4 லட்சத்துக்கும் மேல் பணத்தைப் பெற்றுக் கொண்டு பட்டா செய்வதாக தெரிவித்து தற்போது பட்டா செய்து தர முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.இதனால் அதிர்ச்சடைந்த சுப்பிரமணி மண்டல வருவாய் துறை அலுவலகத்தில் புகார் தெரிவித்தார்.

ஆனால் அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் பலமுறை கலெக்டர் அலுவலகத்திலும் புகார் மனு வழங்கியுள்ளார். ஆனால் இதுவரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த சுப்பிரமணி தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து பூச்சிக்கொல்லி மருந்து எடுத்து வந்து எனக்கு நியாயம் கிடைக்காவிட்டால் நான் குடும்பத்தோடு விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வேன் என தெரிவித்து கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சுப்பிரமணி குடும்பத்தாரை மீட்டு கலெக்டரிடம் அழைத்துச் சென்றனர். அப்போது கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து மிக விரைவில் மீதமுள்ள 3 ஏக்கர் 30 சென்ட் பட்டா செய்து தருகிறேன் என உறுதியளித்தார். தற்கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டதால் கலெக்டர் அலுவலகம் முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post சித்தூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ரூ.4 லட்சம் பெற்றுகொண்டு கிராம வருவாய் துறை அதிகாரி பட்டா வழங்க மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Chittoor collector ,Chittoor ,Subramaniam ,Bhuvaneshwari ,Sutta Kuppam ,Mukaram ,Chittoor district ,V Kota mandal ,Subramani ,Chittoor Collector's ,Dinakaran ,
× RELATED உடல் உஷ்ணம் அதிகரித்து மூளை...