×

ஆளுநர் பங்கேற்கும் விழாவில் அரங்குக்கு வந்து மாணவர்களின் வருகையை பதிவு செய்ய அண்ணா பல்கலை. உத்தரவு: கல்வியாளர்கள் கண்டனம்

சென்னை: சென்னை கிண்டியில் அமைந்துள்ள அண்ணா பல்கலைகழகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் இன்று நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் 127-வது பிறந்தநாள் விழாவானது நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டுள்ளார். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பதினர் வந்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக கிண்டி வளாகத்தில் படிக்க கூடிய ECE, CS, IT ஆகிய துறைகளை சேர்ந்த 3-ம் ஆண்டு மற்றும் 4-ம் ஆண்டு மாணவர்கள் கலந்துகொள்ள வேண்டும் என அண்ணாபல்கலைகழகத்தின் டீன் உத்தரவிட்டிருந்தார். மேலும் பார்வையாளர்களாக வரக்கூடிய மாணவர்களுக்கு அந்தந்த வகுப்புகளை சேர்ந்த ஆசிரியர்கள் மாணவர்களின் வருகை பதிவை நேரடியாக அரங்கத்திற்குள் வந்து எடுக்க உத்தரவிடபட்டுள்ளது.

மாணவர்களுக்கு இன்றைய தினம் வகுப்புகளும் இருந்தது. அதே போல் 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு 4-மணி நேர ஆய்வக பயிற்சிகளும் இருந்த நிலையில் மாணவர்களை பார்வையாளர்களாக இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து வருந்தது மட்டுமல்லாமல் அரங்கிற்குள் இருக்ககூடிய மாணவர்களுக்கு மட்டுமே இந்த வருகை பதிவு செய்யப்படும் என சுற்றறிக்கை அணுப்பபட்டதற்க்கு கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

The post ஆளுநர் பங்கேற்கும் விழாவில் அரங்குக்கு வந்து மாணவர்களின் வருகையை பதிவு செய்ய அண்ணா பல்கலை. உத்தரவு: கல்வியாளர்கள் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Anna University ,Chennai ,Netaji Subhas Chandrabos ,Vivekananda Arena ,Kindi, Chennai ,Tamil Nadu ,Governor ,R. N. Ravi ,
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...