×

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு ஊட்டி, குன்னூர், கூடலூர் தொகுதிகளில் 5 லட்சத்து 73 ஆயிரம் வாக்காளர்கள்

*ஆண்களை விட பெண்களே அதிகம்

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் நேற்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் படி ஊட்டி, கூடலூர் மற்றும் குன்னூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் 5 லட்சத்து 73 ஆயிரத்து 624 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 27ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன்படி ஊட்டி, கூடலூர் மற்றும் குன்னூர் ஆகிய 3 தொகுதிகளிலும் 5 லட்சத்து 70 ஆயிரத்து 632 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.

தொடர்ந்து அக்டோபர் 27ம் தேதி முதல் டிசம்பர் 9ம் தேதி வரை 1.1.2024ஐ தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்டவற்றிற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதுதவிர டிசம்பர் மாதத்தில் 4,5 மற்றும் 18, 19 ஆகிய சனி, ஞாயிற்று கிழமைகளில் வாக்குசாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
இதில் பெயர் சேர்ப்பிற்கு 14 ஆயிரத்து 360 விண்ணப்பங்களும், நீக்கத்திற்கு 11 ஆயிரத்து 368 விண்ணப்பங்களும் பெறப்பட்டன. இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வீடு வீடாக சென்று கள ஆய்வு செய்யப்பட்டு வாக்காளர் பட்டியலில் சேர்ப்பு மற்றும் நீக்கம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் ஊட்டியில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் அருணா தலைமை வகித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இறுதி வாக்காளர் பட்டியல் படி நீலகிரியில் உள்ள வாக்காளர்கள் விவரம்: ஊட்டி சட்டமன்ற தொகுதி – 92 ஆயிரத்து 813 ஆண்கள், ஒருலட்சத்து ஆயிரத்து 431 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 12 பேர் என 1 லட்சத்து 94 ஆயிரத்து 256 ேபர் இடம் பெற்றுள்ளனர்.

கூடலூர் (தனி) தொகுதி – 92 ஆயிரத்து 892 ஆண்கள், 98 ஆயிரத்து 718 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 4 பேர் என மொத்தம் 1 லட்சத்து 91 ஆயிரத்து 614 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். குன்னூர் தொகுதி – 88 ஆயிரத்து 792 ஆண்கள், 98 ஆயிரத்து 958 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 4 என ெமாத்தம் 1 லட்சத்து 87 ஆயிரத்து 754 வாக்காளர்கள் உள்ளனர். மூன்று தொகுதியிலும் சேர்த்து 2 லட்சத்து 74 ஆயிரத்து 497 ஆண்கள், 2 லட்சத்து 99 ஆயிரத்து 107 பெண்கள், 20 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 5 லட்சத்து 73 ஆயிரத்து 624 வாக்காளர்கள் உள்ளனர்.

வரைவு வாக்காளர் பட்டியலை காட்டிலும், தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி பட்டியலில் 492 ஆண்கள், 2497 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 3 பேர் என மொத்தம் 2,992 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். மாவட்ட கலெக்டர் அருணா கூறுகையில்:இறுதி பட்டியல் படி நீலகிரியில் உள்ள 3 தொகுதிகளில் 5 லட்சத்து 73 ஆயிரத்து 624 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

பொதுமக்கள் அனைவரும் சம்மந்தப்பட்ட ஆர்டிஒ., அலுவலகங்கள் மற்றும் வாக்குசாவடி நிலை அலுவலர்களிடம் இறுதி பட்டியலை பார்வையிட்டு திருத்தங்கள் இருப்பின் ஆர்டிஒ., அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி ஆணையர் அலுவலகங்களில் அனைத்து வேலை நாட்களிலும் nvsp.in என்ற இணையதளம் மூலமாகவும், உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம்.

வாக்காளர் பட்டியல் தொடர்பான சந்தேகங்களுக்கு மாவட்ட தகவல் மைய கட்டணமில்லா தொலைபேசி எண் 0423-1950ஐ தொடர்பு கொள்ளலாம், என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, ஆர்டிஒ.,க்கள் மகராஜ், முகமது குதுரத்துல்லா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தனப்பிரியா, தேர்தல் வட்டாட்சியர் சீனிவாசன் மற்றும் வட்டாட்சியர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

The post இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு ஊட்டி, குன்னூர், கூடலூர் தொகுதிகளில் 5 லட்சத்து 73 ஆயிரம் வாக்காளர்கள் appeared first on Dinakaran.

Tags : Kunnur, Koodalur ,Nilgiri district ,Ooty, ,Koodalur ,Gunnar ,Nilagiri district ,Ooty, Gunnar, Kutalur ,Dinakaran ,
× RELATED கொல்லிமலை முதல் காந்திபேட்டை வரை புறவழி சாலை விரிவாக்க பணிகள் தீவிரம்