×

கல் தானம் செய்தவருக்குக்கூட அழைப்பில்லையா?: அயோத்தி ராமர் சிலைக்கு கல் தானம் அளித்த தலித் விவசாயி குற்றச்சாட்டு

கர்நாடகா: அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பால ராமர் சிலைக்கு கல் தானம் அளித்த கர்நாடக தலித் விவசாயிராமர் கோவில் கட்ட தனது 2.14 ஏக்கர் நிலத்தையும் தானம் அளிப்பதாக அறிவித்துள்ளார். ஆனால் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு விவசாயி அழைக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. கர்நாடக மாநிலம் மைசூரை அடுத்துள்ள கிராமத்தை சேர்ந்தவர் ராம் தாஸ் தலித் சமூகத்தை சேர்ந்த விவசாயியான இவர் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

கடந்த 2 ஆண்டுகளாக தனது நிலத்தை செம்மை செய்து விவசாயம் செய்ய முயற்சித்து வந்த இவருக்கு நிலத்தில் இருந்த கருங்கற்கள் இடையூறாக இருந்துள்ளன. இதனை அடுத்து அப்பகுதியை சேந்த சீனிவாஸ் நடராஜ் என்ற குவாரி குத்தகை காரரிடம் கற்களை அகற்ற கூறியுள்ளார். குவாரி குத்தகைதாரர் ஸ்ரீநிவாஸ்நடராஜ் ராமதாஸ் நிலத்திலிருந்து எடுத்த பெரிய கல்லை 3 துண்டுகளாக உடைத்தார். அதில் ஒரு துண்டு தான் பால ராமர் சிலை செய்ய பயன்பட்டுள்ளது.

அந்த ராமர் சிலையினை செதுக்கிய சிற்பியான கர்நாடகாவை சேர்ந்த அருண் யோகிராஜ் மீண்டும் இரண்டு துண்டுகளையும் கூட லக்ஷ்மணன் மற்றும் சத்துருகன் சிலைகளை செய்ய பயன்படுத்தி கொள்வதாக கூறியுள்ளார். இந்நிலையில் தற்போது 2.14 ஏக்கர் மொத்த நிலத்தையும் கர்நாடகாவில் ராமர் கோவில் எழுப்ப தானமாக அளிப்பதாக தலித் விவசாயி ராம்தாஸ் அறிவித்துள்ளார். ஆனால் ராமர் சிலைக்கு கல் தானம் அளித்த ராம்தாஸ் குவாரி குத்தகைதாரர் ஸ்ரீனிவாஸ் நடராஜ் ஆகியோர் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு அழைக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.

ராமர் சிலை செய்த கல்லை தோண்டி எடுத்ததற்கு தனக்கு சட்ட விரோத சுரங்கப்பணி செய்ததாக ரூ.80,000 அபராதம் விதிக்கப்பட்டதாக குவாரி குத்தகைதாரர் ஸ்ரீனிவாஸ் நடராஜ் கூறியுள்ளார். அதே போல் உடைக்கப்பட்ட 3 கற்களையும் அயோத்தி கொண்டுபோய் சேர்க்க தனக்கு 6 லட்சம் செலவானதாகவும், ஆனால் ராமர் கோவில் அறக்கட்டளையுடன் தொடர்புடைய ஸ்ரீனிவாஸ் தனக்கு வெறும் ஒரு லட்சத்து 95 ஆயிரம் மட்டுமே பணம் கொடுத்ததாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். சிலைக்கான கல் தானம் அளித்த தலித் விவசாயி மற்றும் கல் கொண்டுபோய் சேர்த்த குவாரி குத்தகை தாரர் இருவருக்கும் கூட ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு அழைப்பு இல்லாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

The post கல் தானம் செய்தவருக்குக்கூட அழைப்பில்லையா?: அயோத்தி ராமர் சிலைக்கு கல் தானம் அளித்த தலித் விவசாயி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Ram ,Ayodhya ,Karnataka ,Ram temple ,
× RELATED அயோத்தி கோயிலில் ஜனாதிபதி தரிசனம்