×

வேங்கை வயல் விவகாரம்: தடயவியல் ஆய்வின் முடிவுகளில் குடிநீர் தொட்டியிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரியுடன் 31 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் ஒத்துப்போகவில்லை

புதுக்கோட்டை: வேங்கை வயல் சம்பவத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் கலந்த மனித கழிவு மாதிரியும் 31 பேரிடம் எடுக்கபட்ட டிஎன்ஏ மாதிரியும் ஒத்துபோகவில்லை என சிபிசிஐடி எஸ்பி தில்லை நடராஜன் தகவல் வெளியிட்டுள்ளார்.

புதுகோட்டை மாட்டம் வேங்கை வயலில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவுகளை கலந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து 189 நபர்களிடம் விசாரணை செய்து அவர்களுடம் இருந்து வாக்குமூலங்களை பெற்றுள்ளனர். இதனை அடுத்து சிபிசிஐடி போலீசார் சந்தேகித்த 31 நபர்களிடம் நீதிமன்ற அனுமதியுடன் டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனை புதுகோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் எடுக்கபட்டது. அதன் முடிவுகள் பகுப்பாய்வு மையத்திற்க்கு அனுப்பபட்டது.

இந்த நிலையில் டிஎன்ஏ பரிசோதனை நடத்தபட 31 நபர்களுக்கு உண்மை கண்டரியும் சோதனை நடத்தப்பட வேண்டும் என சிபிசிஐடி போலீசார் புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இந்த வழக்கானது தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று காலை 31 பேரிடம் எடுக்கபட்ட ரத்த மாதிரி பரிசோதனை முடிவுகள் பகுப்பாய்வு செய்யபட்டு அதன் முடிவுகள் மூடி முத்திரையிடபட்ட கவரில் வந்தது.

அதில், மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து எடுப்பட டிஎன்ஏ மாதிரியும், 31 பேரிடம் இருந்ந்து எடுக்கபட்ட டிஎன்ஏ ரத்த மாதிரியும் ஒத்துப்போகவில்லை என தெரிவிக்கபட்டுள்ளது.

The post வேங்கை வயல் விவகாரம்: தடயவியல் ஆய்வின் முடிவுகளில் குடிநீர் தொட்டியிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரியுடன் 31 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் ஒத்துப்போகவில்லை appeared first on Dinakaran.

Tags : Vengai ,Pudukottai ,CBCID ,Thillai Natarajan ,Mattam ,Dinakaran ,
× RELATED வேங்கைவயல் விவகாரம்: தேர்தல்...