×

பெட்ரோல் குண்டு வீசிய 2 பேர் கைது

கடலூர்: மஞ்சக்குப்பம் அருகே காதலித்ததை தட்டி கேட்டதால் பெட்ரோல் குண்டு வீசிய கல்லூரி மாணவன் உள்பட 2 பேர் கைது செய்யபப்ட்டுள்ளனர். கடந்த 20-ம் தேதி அதிகாலை மோகன் என்பவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக போலீசில் புகார் எழுந்தது. புகாரை அடுத்து போலீசார் சிசிடிவி கேமராக்களில் பதிவான 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். கல்லூரி மாணவனை காதலித்து வரும் நண்பரின் மகளை மோகன் கண்டித்ததால் பெட்ரோல் குண்டு வீசியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. மோகன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய கல்லூரி மாணவன், 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

The post பெட்ரோல் குண்டு வீசிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Manjakuppam ,Mohan ,
× RELATED லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் உதவியாளர் சஸ்பெண்ட்