×

உத்திரமேரூரில் இருந்து சாலவாக்கம், செங்கல்பட்டு வழியாக கிளாம்பாக்கத்திற்கு புதிய பேருந்து சேவை: சுந்தர் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

உத்திரமேரூர், ஜன.23: உத்திரமேரூரில் இருந்து சாலவாக்கம், செங்கல்பட்டு வழியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு புதிய பேருந்து சேவையினை சுந்தர் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில் இருந்து சாலவாக்கம், செங்கல்பட்டு வழியாக சென்னை மாநகரத்திற்கு பேருந்து இயக்க வேண்டும் என உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்ற அவர் விழுப்புரம் கோட்டம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு பரிந்துரை செய்தார். அதன்படி, போக்குவரத்து கழக மண்டல மேலாளர் தட்சணாமூர்த்தி, கிளை மேலாளர்கள் நடராஜன், இளங்கோ ஆகியோர் நடவடிக்கை மேற்கொண்டு உத்திரமேரூரில் இருந்து சாலவாக்கம் வழியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு புதிய வழித்தடத்தில் பேருந்து போக்குவரத்து இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர். அதன் சேவை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி சாலவாக்கம் பேருந்து நிலையத்தில் நேற்று நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு, உத்திரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் குமார் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் சத்யா சக்திவேல் அனைவரையும் வரவேற்றார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ புதிய வழித்தடத்தில் பேருந்து போக்குவரத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, சிறிது தூரம் பேருந்தில் பயணச்சீட்டு பெற்று பயணம் செய்தார். இந்த போக்குவரத்து தொடங்கப்பட்டதால் உத்திரமேரூர், திருப்புலிவனம், குன்னவாக்கம், சாலவாக்கம், மெய்யூர், செங்கல்பட்டு வழியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை தினமும் 3 முறை இயக்கப்பட உள்ளது. இந்த பேருந்து இந்த வழித்தடத்தில் இயக்குவதால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், கிராமமக்கள் பயனடைவர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட கவுன்சிலர் சிவராமன், அறங்காவலர் குழு உறுப்பினர் வெங்கடேசன், ஊராட்சி மன்ற துணை தலைவர் நந்தா, நிர்வாகிகள் சேகர், பாலமுருகன், விஷ்ணு, அப்பாதுரை, வெங்கடேசன், முரளி, அழகப்பன், தர்மராஜ், சுந்தரமூர்த்தி உள்ளிட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

The post உத்திரமேரூரில் இருந்து சாலவாக்கம், செங்கல்பட்டு வழியாக கிளாம்பாக்கத்திற்கு புதிய பேருந்து சேவை: சுந்தர் எம்எல்ஏ தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Uthramerur ,Chalavakkam ,Chengalpattu ,Klambach ,Sundar ,MLA ,Uttaramerur ,Klampakkam ,Kanchipuram District ,Chennai ,Klambacham ,
× RELATED சாலவாக்கத்தில் உள்ள கடைகளில் சுகாதாரத்துறையினர் சோதனை