×

ராமருக்கும் தமிழகத்துக்கும் இருக்கும் ஆழமான பந்தத்தை மோடி வலிமைப்படுத்தி இருக்கிறார்: பாஜ தலைவர் அண்ணாமலை பேட்டி

சென்னை: சென்னை கோபாலபுரத்தில் உள்ள வேணுகோபால சுவாமி கோயிலில் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நேரில் பார்த்தார். அப்போது மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம், மாவட்ட தலைவர் விஜய் ஆனந்த், மாநில ஊடக பிரிவு தலைவர் ரங்கநாயகலு உடன் இருந்தனர். தொடர்ந்து அண்ணாமலை அளித்த பேட்டி: ராமருக்கும் தமிழகத்துக்கும் இருக்கக்கூடிய ஆழமான பந்தத்தை பிரதமர் மோடி இன்னும் புதுப்பித்து வலிமைப்படுத்தி இருக்கிறார். இந்திய மக்கள் அனைவரும் ஒரே தாய், ஒரே பிள்ளை, ஒரே ரத்தம் என்பதை அயோத்தியில் குழந்தை ராமரின் பிராண பிரதிஷ்டை நிகழ்வு எடுத்துரைத்திருக்கிறது. ராகுல் காந்தி ஒவ்வொரு தேர்தலின் போதும் அமர், அக்பர், ஆண்டனி என அவதாரம் எடுக்கிறார். ராகுல், அசாம் சென்ற போது, அங்கு மக்கள் ஜெய்ராம் என கோஷம் போட்டனர். இதைக்கேட்ட, ராகுல், அந்த மக்களிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். ராகுல் காந்தி இந்தியாவில் எங்கு செல்லவும் அனுமதி இருக்கிறது. ஆனால், ஜெய்ராம் எனவும், மோடி எனவும் மக்கள் சொல்லக்கூடாது என கருதுவது ஏற்புடையது அல்ல.

The post ராமருக்கும் தமிழகத்துக்கும் இருக்கும் ஆழமான பந்தத்தை மோடி வலிமைப்படுத்தி இருக்கிறார்: பாஜ தலைவர் அண்ணாமலை பேட்டி appeared first on Dinakaran.

Tags : Modi ,Rammar ,Tamil Nadu ,BJP ,Annamalai ,Chennai ,Ayothi Ramar Temple Kumbapisheka event ,Venugopala Swami Temple ,Gopalpura, Chennai ,President of the State of Bahia ,Secretary of State ,Vinoj P. Wealth ,Vijay ,Bajaj ,
× RELATED பணம் சுருட்டல், கூலி ஆட்களை வைத்து...