×

இலங்கையில் நடந்த ஈஸ்டர் குண்டுவெடிப்பில் பலியான 11 இந்தியர்கள் உட்பட 273 பேரை புனிதராக அறிவிக்க முடிவு

கொழும்பு: இலங்கையில் தேவாலயத்தில் ஈஸ்டரின்போது குண்டு வெடிப்பில் பலியான 11 இந்தியர்கள் உட்பட 273 பேரை புனிதர்களாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி ஈஸ்டர் பண்டிகையின்போது ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாத குழுவான தேசிய தவ்ஹத் ஜமாத்தை சேர்ந்த 9 மனித வெடிகுண்டுகள், 3 தேவாலயங்கள் உட்பட பல ஓட்டல்களில் குண்டுகளை வெடிக்க செய்தனர். இதில் 273 பேர் பலியானார்கள். இந்நிலையில் தேவாலயத்தில் உயிரிழந்தவர்களை புனிதர்களாக அறிவிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில் கத்தோலிக்க பேராயர் கர்தினால் மால்கம் ரஞ்சித் கூறுகையில், “ஒருவர் தியாகம் செய்து 5 ஆண்டுகளான பின்னர் தான் அவருக்கு புனிதர் என்று பெயரிடப்படும். 2019ம் ஆண்டு ஈஸ்டர் பண்டிகையின்போது குண்டு வெடிப்பில் பலியான 11 இந்தியர்கள் உட்பட 273 பேரையும் இந்த ஆண்டு ஏப்ரல்21ம் தேதி புனிதர்களாக அறிவிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் கிறிஸ்துவை நம்பியதால் தான் தேவாலயத்துக்கு வந்தனர். அவர்கள் நம்பிக்கையால் தான் தங்கள் வாழ்க்கையை இழந்தனர்” என்றார்.

The post இலங்கையில் நடந்த ஈஸ்டர் குண்டுவெடிப்பில் பலியான 11 இந்தியர்கள் உட்பட 273 பேரை புனிதராக அறிவிக்க முடிவு appeared first on Dinakaran.

Tags : Easter ,Sri Lanka ,Colombo ,Easter festival ,IS ,
× RELATED நிவாரணப் பொருட்களை வழங்கி உதவிய...