×
Saravana Stores

இயற்கை அழகை ரசித்தபடி பயணம் கேரளா செல்லும் ரயில்களில்‘விஸ்டா டோம்’ பெட்டிகள்

சிவகாசி: தென்னிந்தியாவில் உள்ள மலை ரயில் பாதைகளில் செங்கோட்டை – புனலூர் வழித்தடம் சுரங்கங்கள், பள்ளத்தாக்குகள் நிறைந்த இயற்கை எழில் கொஞ்சும் பாதையாகும். தமிழகம் – கேரளாவை இணைக்கும் இந்த வழித்தடத்தில் கூடுதல் பெட்டிகளுடன் ரயில்களை இயக்குவதற்கான ஆய்வு நடைபெற்றது. அதில் விஸ்டா டோம் எனப்படும் கண்ணாடி மேற்கூரை வசதியுடன் கூடிய ரயில் பெட்டி ஒன்று இணைக்கப்பட்டு சோதனை நடைபெற்றது. இதன் மூலம், இனி வரும் காலங்களில் கண்ணாடி மேற்கூரை பெட்டிகள் வழியாக இயற்கை அழகை ரசிக்க முடியும் என ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இதுகுறித்து ரயில்வேத்துறையினர் கூறுகையில், ‘‘செங்கோட்டை – புனலூர்வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து ரயில்களும் இரு இன்ஜின்களுடன் சேர்த்து 14 பெட்டிகளுடன், 30 கிலோ மீட்டர் வேகத்திற்குள் மட்டுமே இயக்கப்படுகிறது. விஸ்டா டோம் கண்ணாடி கூரையுடன் இயக்கப்படும் பெட்டிகளில் பயணிக்கும் போது பயணிகள் இயற்கை எழில் காட்சிகளை ரசித்த படி பயணிக்கமுடியும்’’ என தெரிவித்தனர்.

The post இயற்கை அழகை ரசித்தபடி பயணம் கேரளா செல்லும் ரயில்களில்‘விஸ்டா டோம்’ பெட்டிகள் appeared first on Dinakaran.

Tags : Dome ,Kerala ,Sivakasi ,Sengottai – Punalur ,South India ,Tamil Nadu ,Vista Dome ,
× RELATED கேரள மாநிலம் பாலக்காடு அருகே காரும்,...