×

பெங்களூரு தொழிலதிபரின் அட்ராசிட்டி 10 நிமிடம் நடந்த கல்யாணத்துக்கு ஹெலிகாப்டரில் வந்த மணமக்கள்: ஏலகிரியில் மக்கள் கூடியதால் பரபரப்பு

ஏலகிரி: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது. கடல் மட்டத்தில் இருந்து 1700 மீட்டர் உயரம் உள்ள இந்த மலையில் எப்போதும் குளிர்ந்த சீதோஷண நிலை நிலவுவதால் ஏழைகளின் ஊட்டி என்றும் அழைக்கப்படுகிறது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். அவ்வாறு வருபவர்கள் தங்குவதற்கு 100க்கும் மேற்பட்ட தனியார் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் திருமண மண்டபங்கள் மற்றும் தனியார் விடுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்களில் உள்ள விஐபிக்களும் ஏற்பாடு செய்கின்றனர் இந்நிலையில் நேற்று ஒரு தனியார் விடுதிக்கு சொந்தமான இடத்தில் திடீரென ஹெலிகாப்டர் தரையிறங்கியது. கிராம மக்கள் அப்பகுதியில் திரண்டு வியந்து பார்த்தனர். மேலும் பலர் செல்போனில் புகைப்படம் எடுத்தனர். அவர்கள் இதுகுறித்து விசாரித்தபோது, பெங்களூருரை சேர்ந்த தொழிலதிபர் தனது இல்ல திருமணத்தை தனியார் விடுதியில் நேற்று மிக பிரமாண்டமாக நடத்தி உள்ளார். இதற்காக மணமக்களை பெங்களூவில் இருந்து ஏலகிரிக்கு அழைத்து வந்து தாலி கட்டிவிட்டு 10 நிமிடத்தில் அந்த விடுதியில் இருந்து மீண்டும் பெங்களூருவுக்கு அந்த ஹெலிகாப்டரில் பறந்து சென்று உள்ளார்.

The post பெங்களூரு தொழிலதிபரின் அட்ராசிட்டி 10 நிமிடம் நடந்த கல்யாணத்துக்கு ஹெலிகாப்டரில் வந்த மணமக்கள்: ஏலகிரியில் மக்கள் கூடியதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Yelagiri ,Elagiri ,Elagiri hill ,Jollarpet ,Tirupattur district ,Ooty ,Dinakaran ,
× RELATED ஜோலார்பேட்டையில் பணிகள்...