×

குமரி பஸ் ஊழியர் கொலை பங்கு பேரவை நிர்வாகி சிக்கினார்

நாகர்கோவில்: குமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே உள்ள மைலோடு மடத்துவிளை பகுதியை சேர்ந்தவர் சேவியர் குமார் (45). கன்னியாகுமரி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்த இவர், நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றிய தலைவராகவும் இருந்தார். இவரது மனைவி ஜெமினி (40) மைலோடு தேவாலயத்துக்குட்பட்ட பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றினார். தேவாலய வரவு, செலவுகள் தொடர்பாக சேவியர்குமாருக்கும், ஆலய நிர்வாகத்துக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதனால் ஜெமினியை, தேவாலய நிர்வாகம் ஆசிரியர் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்தது. இதுகுறித்த பேச்சு வார்த்தை மைலோடு ஆலய வளாகத்தில் உள்ள பங்கு தந்தை இல்லத்தில் கடந்த 20ம் தேதி நடைபெற்றது. இதில், சேவியர் குமார், பங்கு தந்தை ராபின்சன் உள்ளிட்டோர் இருந்துள்ளனர். அப்போது ஏற்பட்ட மோதலில் சேவியர்குமார் கொல்லப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் 15 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். இநிலையில். ஆலய பங்கு நிர்வாகி ஒருவரை, தனிப்படை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

The post குமரி பஸ் ஊழியர் கொலை பங்கு பேரவை நிர்வாகி சிக்கினார் appeared first on Dinakaran.

Tags : Kumari ,Panko Samara ,Nagercoil ,Xavier Kumar ,Mylodu Matathuvilai ,Dingalchandi ,Kumari district ,Kanyakumari Government Transport Corporation ,Naam Tamilar Party ,
× RELATED கன்னிப்பூ சாகுபடி பணிக்கு கோடை மழையை எதிர்நோக்கும் விவசாயிகள்