×

கார் டயர் வெடித்து விபத்து தாம்பரம் காவலர், மனைவியுடன் பலி: 4 பேர் படுகாயம்

உளுந்தூர்பேட்டை: சென்னை தாம்பரம் அருகே சங்கர் நகர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தவர் பாலமுருகன் (32). இவர் தனது மனைவி வினோதினி (30) என்பவருடன் காரில் கரூரில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு மீண்டும் சென்னைக்கு திரும்பினார். காரை பாலமுருகன் ஒட்டிச்சென்றுள்ளார். உளுந்தூர்பேட்டை அருகே பாலி தமிழ்நாடு சிறப்பு காவல் படை பகுதியில் உள்ள மேம்பாலத்தில் சென்றபோது திடீரென காரின் முன் பக்க டயர் வெடித்து நிலை தடுமாறிசாலையில் கவிழ்ந்தது. இதன் மீது புதுச்சேரியில் இருந்து திருச்சி நோக்கி சென்ற மற்றொரு கார் மோதியது. இதில், பாலமுருகன், அவருடைய மனைவி வினோதினி ஆகியோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இருவரும் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். திருச்சி தொட்டியம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (67), கார்த்திக் (42) மற்றும் காரில் சென்ற வித்யா (34), டிரைவர் பராசக்தி (48) உள்ளிட்ட நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.

The post கார் டயர் வெடித்து விபத்து தாம்பரம் காவலர், மனைவியுடன் பலி: 4 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Ulundurpet ,Balamurugan ,Shankar Nagar ,station ,Tambaram, Chennai ,Karur ,Vinothini ,Chennai ,
× RELATED தாம்பரம் பகுதிகளில் தொடரும் மின்வெட்டு: இரவில் விடியவிடிய மக்கள் அவதி