புதுடெல்லி: நாடு முழுவதும் 1 கோடி வீடுகளில் சோலார் பேனல் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். அயோத்தியில் ராமர் கோயில் திறப்புவிழாவில் பங்கேற்றுவிட்டு டெல்லி திரும்பிய பிரதமர் மோடி வீடுகளில் சோலார் பேனல்கள் அமைக்கும் திட்டம் குறித்து அதிகாரிகளுடன் விவாதித்தார். இதன்பிறகு தனது எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது: அயோத்தியில் இருந்து திரும்பிய பிறகு, ஒரு கோடி வீடுகளில் சோலார் மேற்கூரை பேனல்களை நிறுவும் நோக்கத்துடன் எங்கள் அரசு ‘பிரதான் மந்திரி சூர்யோதய் யோஜ்னா’ என்ற திட்டத்தை தொடங்கும் என்று எனது முதல் முடிவை எடுத்துள்ளேன். உலகெங்கிலும் உள்ள பக்தர்கள் எப்போதும் சூர்யவம்சத்தை சேர்ந்த பகவான் ராமரின் ஒளியிலிருந்து ஆற்றலைப் பெறுகிறார்கள். இந்தத் திட்டம் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் மின் கட்டணத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல், எரிசக்தித் துறையில் இந்தியாவைத் தன்னிறைவு அடையச் செய்யும்’ என்று அவர் பதிவிட்டுள்ளார்.
The post கோடி வீடுகளில் சோலார் பேனல்: மோடி அறிவிப்பு appeared first on Dinakaran.