×

பாலக்காடு அருகே பட்டாம்பி குளங்கரை பகவதி கோவிலில் தாலப்பொலி திருவிழா விமரிசை

பாலக்காடு: பாலக்காடு அருகே பட்டாம்பி குளங்கரை பகவதி கோவிலில் தாலப்பொலி திருவிழா நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. பாலக்காடு மாவட்டம் பட்டாம்பியை அடுத்த குளங்கரை பகவதி கோவிலில் தாலப்பொலி திருவிழா வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்றது. இதையொட்டி கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. அம்மனுக்கு அபிஷேக மற்றும் அலங்கார பூஜைகள், உச்சிக்கால பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து காலை 9 மணிக்கு கோவில் வளாகத்தில் 3 யானைகள் அலங்காரத்துடன் அம்மன் யானை மீது பஞ்சவாத்ய மேளம் முழங்க பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்வேறு வேடங்கள் தரித்த கலைஞர்கள் மேளத்தாளத்துடன் நடனமாடி பார்வையாளர்களை பரவசப்படுத்தினர். மாலை 5 மணிக்கு அம்மன் வீதியுலா யானை மீது பஞ்சவாத்யத்துடன் நடைபெற்றது. வீதி உலாவில் கேளி, தையம், கருங்காளி, சிங்காரிமேளம், காவடியாட்டம் என வேடம் தரித்த கலைஞர்களின் நடன ஆட்டம் இடம் பெற்றிருந்தது. இவற்றை பார்க்க பட்டாம்பி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவில் மைதானத்தில் திரண்டனர். பின்னர் அம்மனை தரிசித்துவிட்டு சென்றனர்.

The post பாலக்காடு அருகே பட்டாம்பி குளங்கரை பகவதி கோவிலில் தாலப்பொலி திருவிழா விமரிசை appeared first on Dinakaran.

Tags : Thalapoli Festival ,Bhagwati Temple ,Bhatampi Kulangari Bhagwati Temple ,Palakkad ,Talapoli Festival ,Patambi Kulangari Bhagwati Temple ,Kulangara Bhagwati Temple ,Patampi, Palakkad district ,Ganpati Home ,Amman ,Thalapoli Festival Vimrisai ,Bhatampi Kulangari ,
× RELATED பனம்தொடி முனீஸ்வரசுவாமி கோவிலில் தாலப்பொலி திருவிழா