×

சென்னையில் போதைப்பொருட்களை விற்பனை செய்த நைஜீரியாவை சேர்ந்த 3 பேரை கைது செய்த தனிப்படை காவல் குழுவினருக்கு பாராட்டு!

சென்னை: அமைந்தகரை பகுதியில் கொக்கைன் போதைப்பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த 3 நபர்களை கைது செய்த தனிப்படை காவல் குழுவினரை காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

சென்னையில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, அண்ணாநகர் காவல் மாவட்ட துணை ஆணையாளர் R.ரோகித் நாதன் ராஜகோபால், தலைமையில் அமைந்தகரை உதவி ஆய்வாளர் K.கிருஷ்ணமூர்த்தி, K-3 அமைந்தகரை காவல் நிலைய ஆய்வாளர் P.கிருபாநிதி, உதவி ஆய்வாளர்கள் E.ராஜ்பிரபு, G.தசரதன், முதல் நிலைக்காவலர்கள் ஜான் இளங்கோ (மு.நி.கா.40650) S.மாரிசாமி (45560), M.ராம் சங்கர், காவலர்கள் G.மகேஷ், (கா.58276) M.ராஜபாண்டி (கா.49686), திநந்தகுமார் (கா.55773) ஆகியோர் அடங்கிய காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் கடந்த 20.01.2024 அன்று அமைந்தகரை, ஷெனாய் நகர், மெட்ரோ இரயில் நிலையம் அருகே கண்காணித்தபோது, அங்கு ஒருவர் ரகசியமாக போதைப்பொருள் விற்பனை செய்து கொண்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.

அதன்பேரில், காவல் குழுவினர் போதைப்பொருளை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த 1.அஜாகு சினேடு ஒனாச்சி, வ/47, த/பெ.அஜாகு ஒனாச்சி, Castle Rock Apartment, மணிமங்கலம் கிராமம், முடிச்சூர், சென்னை என்பவரை கைது செய்து விசாரணை செய்தனர். மேலும் விசாரணையில் அஜாகு சினேடு ஓனாச்சி அளித்த தகவலின் பேரில் இவ்வழக்கில் தொடர்புடைய இவரது மனைவி 2.எஸ்மெல்சியா மிகாஷ் (எ) லியோனி, பெ/வ.50, க/பெ.அஜாகு சிநேடு ஓனாச்சி, மணிமங்கலம், முடிச்சூர், மற்றும் 3.அமே சீயோன் இனலெக்வு, வ/40, த/பெ.அமே குட்டிஸ், காமக்கோடி நகர், பள்ளிக்கரணை ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 1 கிலோ கொக்கைன் போதை பொருள், ரொக்கம் ரூ.2 லட்சம் மற்றும் 6 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேற்படி 3 நைஜீரியன் நாட்டைச்சேர்ந்த குற்றவாளிகளை கைது செய்த அண்ணாநகர் காவல் துணை ஆணையாளர் R.ரோகித் நாதன் ராஜகோபால், தலைமையிலான காவல் குழுவினர் சென்னை காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், இன்று (22.01.2024) நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

The post சென்னையில் போதைப்பொருட்களை விற்பனை செய்த நைஜீரியாவை சேர்ந்த 3 பேரை கைது செய்த தனிப்படை காவல் குழுவினருக்கு பாராட்டு! appeared first on Dinakaran.

Tags : Independent Police Team ,Nigeria ,Chennai ,Commissioner of ,Manthankara ,
× RELATED சிறைக்குள் வெள்ளம் 100 கைதிகள் தப்பி ஓட்டம்