×

திண்டுக்கல் உலகம்பட்டியில் பெரிய அந்தோணியார் கோயில் திருவிழாவை ஒட்டி நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு நிறைவு

திண்டுக்கல்: திண்டுக்கல் உலகம்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 20 பேர் காயம் அடைந்துள்ளனர். திண்டுக்கல் அருகே உலகம்பட்டியில் 100 ஆண்டுகள் பழமையான புனித பெரிய அந்தோணியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 762 காளைகள் மற்றும் 500மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர். மதுரை, திருச்சி, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 500 காளைகள் கலந்து கொண்டன.

ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு முன் மாடுபிடி வீரர்களுக்கு 20 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் உடல் பரிசோதனை செய்யப்பட்டு களத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

அதேபோல், காளைகளுக்கும் 27 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் காளைகளை முழுமையாக பரிசோதித்தனர். போட்டியில் வெற்றி பெறும் காளை மற்றும் காளையர்களுக்கு கட்டில், டிவி, கடிகாரம், குக்கர் உள்ளிட்ட பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன. கோட்டாட்சியர் கமலக்கண்ணன் கொடி அசைத்து ஜல்லிக்கட்டு போட்டியினை துவக்கி வைத்தார். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

உலகம்பட்டியில் பெரிய அந்தோணியார் கோயில் திருவிழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. 16 சுற்றுகளுடன் நிறைவடைந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 762 காளைகளுடன் 500 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். காளை முட்டியதில் காயமடைந்த 20 பேரில் 10 பேர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post திண்டுக்கல் உலகம்பட்டியில் பெரிய அந்தோணியார் கோயில் திருவிழாவை ஒட்டி நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு நிறைவு appeared first on Dinakaran.

Tags : Jallikatu ,Great Anthony Temple Festival ,Dindigul Valgambatti ,Dindigul ,Dindigul World Cup ,Saint Great Anthony ,Vajampatti ,
× RELATED மேக்ஸிமம் 2026 வரை நிற்பியா நீ… ஆண் மகனா...