×

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் அமெரிக்காவை விஞ்சியது இந்தியா: நைஜீரியாவில் அமைச்சர் ஜெய்சங்கர் உரை

அபுஜா: டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் அமெரிக்காவில் மூன்று ஆண்டுகளில் எவ்வளவு பணப்பரிமாற்றம் நடக்கிறதோ, அது இந்தியாவில் ஒரு மாதத்தில் நடக்கிறது என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினர்.  நைஜீரியா நாட்டிற்கு சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், அபுஜாவில் இந்திய வம்சாவளி மக்களை சந்தித்தார். அப்போது அவர் ஆற்றிய உரையில், ‘ஒவ்வொரு இந்திய குடிமகனின் வாழ்க்கையும் எளிதாகிவிட்டது.

இதற்குக் காரணம், நாம் தொழில்நுட்பத்தை முழுவதுமாக பயன்படுத்துவது தான். இன்றைய இந்தியாவில் மிகச் சிலரே பணத்தை கையில் வைத்திருந்து செலவு செய்கிறார்கள். ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மூலமே பெரும்பாலான பணப்பரிமாற்றம் நடக்கிறது. அமெரிக்காவில் மூன்று ஆண்டுகளில் எவ்வளவு ஆன்லைன் பணப்பரிவர்த்தனை நடக்கிறதோ, அது இந்தியாவில் ஒரு மாதத்தில் நடக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் நிறைய மாற்றங்கள் நடந்துள்ளன.

டிஜிட்டல் உள்கட்டமைப்பில் இந்தியா வேகமான வளர்ச்சியை கண்டுள்ளது’ என்றார். நைஜீரியா – இந்தியா வணிக கவுன்சில் கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் கலந்து கொண்டு பேசினார். பின்னர் நைஜீரிய இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டர்நேஷனல் அஃபயர்ஸில் உரை நிகழ்த்துகிறார். அங்கு மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை திறந்து வைக்கிறார் என்று வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

The post டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் அமெரிக்காவை விஞ்சியது இந்தியா: நைஜீரியாவில் அமைச்சர் ஜெய்சங்கர் உரை appeared first on Dinakaran.

Tags : India ,US ,Minister ,Jaishankar ,Nigeria ,ABUJA ,External Affairs Minister ,S. Jaishankar ,
× RELATED அமெரிக்கா-ஈரான் நாடுகளில் பிடித்து...