×

ராமர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி தமிழக கோயில்களில் வழிபாடு செய்ய தடை விதிக்கவில்லை: அமைச்சர் துரைமுருகன்

வேலூர்: வேலூர் மாவட்டம் பொன்னையில் இருந்து சென்னைக்கு தடம் எண் 144 கொண்ட அரசு பஸ் போக்குவரத்து பஸ் நிலையத்தில் இன்றுகாலை நடந்தது. இதில் அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று அரசு பஸ்சை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ராமர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி தமிழக கோயில்களில் வழிபாடு செய்ய அரசு சார்பில் எந்த தடையும் விதிக்கவில்லை. காலாவதியான கல்குவாரிகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து கணக்கெடுப்பு நடந்து வருகிறது. காலாவதியான கல்குவாரி நடத்துபவர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என்றார்.

The post ராமர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி தமிழக கோயில்களில் வழிபாடு செய்ய தடை விதிக்கவில்லை: அமைச்சர் துரைமுருகன் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Ram temple kumbabhishekam ,Minister Duraimurugan ,Vellore ,Vellore district Ponnai ,Chennai ,Tamilnadu ,
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...