×

ராமர் கோயில் திறப்பு விழா; தென்ஆப்பிரிக்க வீரர் வாழ்த்து

கேப் டவுன் : தென்ஆப்பிரிக்காவில் பிறந்து வளர்ந்தாலும், பூர்வீக இந்தியரான கேஷவ் மகாராஜ் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு வாழ்த்து கூறி இருக்கிறார். அவர் இந்து மதத்தை சார்ந்தவர் என்பதோடு தென்ஆப்பிரிக்காவில் இருந்தாலும் இந்தியா வரும் போதெல்லாம் கோயில்களுக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். மேலும், அனுமன் பக்தரான கேஷவ் மகாராஜ் தனது வாழ்த்து செய்தியில், ”அனைவருக்கும் வணக்கம்.

மகேஷ் (தென்ஆப்பிரிக்காவிற்கான இந்திய தூதரக அதிகாரி), இந்து சமூகம் மற்றும் தென்ஆப்பிரிக்கா என அனைவருக்கும் நாளை (இன்று) அயோத்தியில் நடைபெற உள்ள ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு வாழ்த்துக்கள். அதன் மூலம் அமைதி, ஆன்மீக ஒளி அனைவருக்கும் கிடைக்கட்டும். ஜெய்  ராம்” எனக் கூறி இருக்கிறார். சமீபத்தில் நடந்த இந்தியா – தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரின் போது கேஷவ் மகாராஜ் பேட்டிங் செய்ய வரும்போது ”ராம் சியா ராம்” என்ற ராமரை குறிக்கும் சினிமா பாடல் மைதானத்தில் ஒலிக்கப்பட்டது. அது அப்போது இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேசும்பொருள் ஆனது குறிப்பிடத்தக்கது.

The post ராமர் கோயில் திறப்பு விழா; தென்ஆப்பிரிக்க வீரர் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Ram ,Temple ,CAPE TOWN ,South Africa ,Keshav Maharaj ,India ,Ayodhya Ram Temple ,Ram temple ,
× RELATED திருத்துறைப்பூண்டி ராமர் கோயிலில் ராமர்- சீதா திருக்கல்யாண உற்சவம்