×

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்: ஆஸ்திரேலிய அணியில் 2 வீரர்கள் விலகல்

சிட்னி: வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கிடையேயான முத்த டெஸ்ட் போட்டி கடந்த 17ம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 2வது கடைசி டெஸ்ட் போட்டி வரும் 25ம் தேதி நடைபெற உள்ளது.

டெஸ்ட் தொடர் முடிவடைந்ததும் அடுத்ததாக இவ்விரு அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது. ஒருநாள் போட்டிகளிலிருந்து ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரர்களான கிளென் மேக்ஸ்வெல் மற்றும் ஜே ரிச்சர்ட்சன் ஆகியோர் விலகியுள்ளனர்.

நட்சத்திர ஆல்-ரவுண்டரும் சமீபத்திய ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை வெற்றியாளருமான கிளென் மேக்ஸ்வெல் சொந்த மண்ணில் நடக்கும் மூன்று போட்டிகளிலிருந்து விலகினார். அதே நேரத்தில் வேகப்பந்து வீச்சாளர் ஜே ரிச்சர்ட்சனும் பக்க காயம் காரணமாக 13 பேர் கொண்ட குழுவிலிருந்து விலக்கப்பட்டுள்ளார்.

இவர்களுக்கு பதிலாக பிரேசர்-மெக்குர்க் மற்றும் சேவியர் பார்ட்லெட் ஆகியோர் அறிமுக வீரர்களாக ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். பிரேசர்-மெக்குர்க் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடும் போது 29 பந்துகளில் சதம் அடித்து, லிஸ்ட் ஏ சதத்தில் அதிவேக சதம் அடித்த ஏபி டி வில்லியர்ஸின் சாதனையை முறியடித்தார்.

ஆஸ்திரேலிய ஒருநாள் அணி: ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், சீன் அபோட், சேவியர் பார்ட்லெட், நாதன் எல்லிஸ், ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், கேமரூன் கிரீன், ஆரோன் ஹார்டி, ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லாபுசாக்னே, லான்ஸ் மோரிஸ், மாட் ஷார்ட், ஆடம் ஜாம்பா.

The post வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்: ஆஸ்திரேலிய அணியில் 2 வீரர்கள் விலகல் appeared first on Dinakaran.

Tags : West Indies ,Sydney ,Australia ,Kiss Test ,Dinakaran ,
× RELATED பிஷப்புக்கு கத்தி குத்து: 7 பேர் கைது