×

அச்சுறுத்தல் ஏதும் இல்லை: ஆளுநர் புகாருக்கு கோதண்டராமர் கோயில் அர்ச்சகர்கள் மறுப்பு

சென்னை: தான் வழிபட சென்றபோது அர்ச்சகர்கள் முகத்தில் அச்ச உணர்வை கண்டதாக எக்ஸ் தளத்தில் ஆளுநர் ரவி பதிவிட்டிருந்தார். இதற்கு தங்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்றும் கோதண்டராமர் கோயில் அர்ச்சகர்கள் விளக்கமளித்துள்ளனர்.

தமிழக ஆளுநர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது:
“இன்று காலை சென்னை, மேற்கு மாம்பலம் அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயிலுக்குச் சென்று, அனைவரும் நலம்பெற பிரபு ஸ்ரீராமரிடம் பிரார்த்தனை செய்தேன். இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ளது.

பூசாரிகள் மற்றும் கோயில் ஊழியர்களின் முகங்களில் கண்ணுக்குப் புலப்படாத பயம் மற்றும் மிகப்பெரிய அச்ச உணர்வு இருந்தது. நாட்டின் பிற பகுதிகளில் கொண்டாடப்படும் பண்டிகை சூழலுக்கு முற்றிலும் அது மாறுபட்டிருந்தது. பால ராமர் பிராண பிரதிஷ்டையை நாடு முழுவதும் கொண்டாடும் போது, அக்கோயில் வளாகம், கடுமையான அடக்குமுறையின் உணர்வை வெளிப்படுத்துகிறது” என கூறப்பட்டிருந்தது.

அர்ச்சகர்கள் விளக்கம்
தங்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்றும், ஆளுநர் வரும் நேரத்தில் தங்களை ஒரு செய்தியாளர் பேட்டி கேட்டார். ஆளுநர் வந்து சென்ற பிறகே பேட்டி அளிக்க முடியும் என்று கூறியதாகவும், அதனை கருத்தில் கொண்டே ஆளுநர் அவ்வாறு கூறியிறுக்கலாம் என அர்ச்சகர்கள் விளக்கமளித்தனர்.

The post அச்சுறுத்தல் ஏதும் இல்லை: ஆளுநர் புகாருக்கு கோதண்டராமர் கோயில் அர்ச்சகர்கள் மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Kothandarama temple ,Governor ,CHENNAI ,Ravi ,Kothandaram Temple ,Tamil ,Nadu ,
× RELATED கொடைக்கானலுக்குச் செல்ல உள்ளூர்...