×

சீர்காழி பள்ளியில் மாறுவேட போட்டி

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கடைவீதி சபாநாயக முதலியார் இந்து உயர்நிலைப்பள்ளியில் பள்ளி நிர்வாக அலுவலர் தங்கவேல் தலைமையில் மாறுவேட போட்டி நடைபெற்றது.
போட்டியில் மாணவ மாணவிகள் முருகன், விநாயகர், சிவன் உள்ளிட்ட சுவாமிகள் மற்றும் தலைவர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள், விவசாயிகள், வியாபாரிகள் வேடமடைந்து வந்து அசத்தினர். பெற்றோர்கள் நடுவர்களாக இருந்து வகுப்பு வாரியாக முதல் மூன்று மாணவ மாணவிகளை தேர்வு செய்து பரிசுகளையும் வழங்கினர். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் தங்கதுரை, துணை முதல்வர்கள் மாதவன், தமிழரசன், உஷா, ஜெய, கிரிஜாபாய் செய்திருந்தனர். விழாவில் பெற்றோர்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர்.

The post சீர்காழி பள்ளியில் மாறுவேட போட்டி appeared first on Dinakaran.

Tags : Sirkazhi School ,Sirkazhi ,Thangavel ,Sabanayaka Mudaliar Hindu High School ,Kadavidi ,Mayiladuthurai district ,Swami ,Murugan ,Vinayagar ,Shiva ,
× RELATED சீர்காழியில் பரபரப்பு கோழியை வேட்டையாடிய நல்ல பாம்பு பிடிபட்டது