×

பொறியியல் மாணவர்களுக்கு தாட்கோ மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி

விருதுநகர், ஜன.22: விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது: தாட்கோ மூலம் டிப்ளமோ, இன்ஜினியரிங் பட்டப்படிப்பில் மெக்கானிக்கல் புரொடக்சன் டெக்னாலஜி எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய தொழில்துறை சார்ந்த தானியங்கி திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் எண் முறை உற்பத்தி துறையில் திறன் மேம்பாட்டு பயிற்சி என்டிடிஎப் நிறுவனத்தின் மூலம் வழங்கி வேலை வாய்ப்பு பெற வழி செய்யப்பட உள்ளது.

இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். பட்டயப்படிப்பு மற்றும் பொறியியல் பட்டப்படிப்பில் மெக்கானிக்கல் புரொடக்சன் டெக்னாலஜி எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் முடித்த 18 முதல் 26 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
6 மாத பயிற்சி காலத்தில் தங்கி படிக்கும் வசதி செய்து தரப்படும்.

பயிற்சியை முழுமையாக முடிக்கும் மாணவர்களுக்கு தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தரச்சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியை முடிக்கும் நபர்களுக்கு மாதந்திர ஊதியமாக ரூ.16ஆயிரம் முதல் ரூ.21 ஆயிரம் வரை பெறலாம். பயிற்சி பெற தகுதியுள்ளவர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம். பயிற்சிக்கான கட்டணத்தை தாட்கோ வழங்கும் என தெரிவித்துள்ளார்.

The post பொறியியல் மாணவர்களுக்கு தாட்கோ மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : TADCO ,Virudhunagar ,Collector ,Jayaseelan ,Dravidian ,
× RELATED கோடை கால பயிற்சி முகாம்: கலெக்டர் துவக்கி வைத்தார்