×

மண், ஜல்லிக்கற்கள் ஏற்றிச்செல்லும் சரக்கு வாகனங்களில் இருந்து சாலையெங்கும் பறந்து வரும் தூசி

தேவதானப்பட்டி, ஜன. 22: தேவதானப்பட்டி பகுதியில் தினந்தோறும் எம்சான்ட், மண், ஜல்லிக்கற்கள், செங்கல் ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு 100கும் மேற்பட்ட சரக்கு வாகனங்கள் செல்கின்றன. இந்த வாகனங்கள் முறையாக விதிமுறைகளை பின்பற்றாமல் செல்வதால் பலதரப்பட்ட மக்கள் பாதிப்படைகின்றனர். வைகை அணை, குள்ளப்புரம், வரதராஜ்நகர், மற்றும் ஆண்டிபட்டி பகுதியில் இருந்து தேவதானப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு தினந்தோறும் 100கும் மேற்பட்ட எம்-சாண்ட், மண், ஜல்லிக்கற்கள் ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனங்கள் கட்டிட வேலைகளுக்கு கொண்டு வரப்படுகிறது.

இந்த வாகனங்களில் சில வாகனங்கள் முறையாக விதிமுறைகளை பின்பற்றப்படாமல் வருகின்றனர். எம்-சாண்ட், மண், சல்லிகற்கள் ஏற்றி வரும் சரக்கு வாகனங்கள் அந்த பொருட்கள் தெரியாமலும், காற்றுக்கு தூசி பறக்காமலும் போர்த்தி கொண்டு வர வேண்டும். ஆனால், ஒரு சில சரக்கு வாகனங்கள் இதை பின்பற்றப்படாமல் அப்படியே பொருட்களை ஏற்றி வருகின்றனர். இதனால் சாலையில் செல்லும் மற்ற வாகனங்கள் பெரிதும் அவதிக்குள்ளாகிவருகின்றனர். மேலும் இந்த சரக்கு வாகன தூசியால் காற்று மாசுபடுகிறது. ஆகையால் போகக்குவரத்து விதிகளை மீறும் சரக்கு வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மண், ஜல்லிக்கற்கள் ஏற்றிச்செல்லும் சரக்கு வாகனங்களில் இருந்து சாலையெங்கும் பறந்து வரும் தூசி appeared first on Dinakaran.

Tags : Devadanapatti ,Vaigai Dam ,Kullapuram ,Varadarajnagar ,Dinakaran ,
× RELATED வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்