×

முதலமைச்சரின் பழங்குடியினர் தொழில் மேம்பாட்டு திட்டத்தில் பயன்பெற வாய்ப்பு

சிவகங்கை, ஜன.22: கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: விளிம்பு நிலையிலுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் கல்வி, சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் வாழ்வாதார திட்டங்களான பொருளாதார மேம்பாட்டு திட்டம், இளைஞர்களுக்கான சுயவேலை வாய்ப்புத் திட்டம், இளைஞர்களுக்கான சுயவேலை வாய்ப்புத் திட்டம்(மருத்துவம்), நிலம் மேம்பாட்டுத் திட்டம் ஆகிய திட்டங்களை ஒருங்கிணைத்து, முதலமைச்சரின் – ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டம் என்ற பெயரில் ரூ.40கோடி செலவில் புதிய திட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது.

இப்புதிய திட்டத்தின்படி ஆதிதிராவிடர்களுக்கான தனிநபர் திட்டத் தொகையில் முன்விடுப்பு மானியமாக விடுவிக்கப்படும் தொகை 30 சதவீதத்தில் இருந்து 35சதவீதமாக உயர்த்தவும் அல்லது அதிகபட்சமாக ரூ.3.50 லட்சம் இதில் எது குறைவானதோ அதை கடன் வழங்கும் வங்கிக்கு வழங்கவும் மற்றும் பழங்குடியினருக்கு திட்ட மதிப்பீட்டில் 50சதவீதம் அல்லது ரூ.3,75,000 இவற்றில் எது குறைவானதோ அத்தொகையை மானியமாக வழங்கவும், 6சதவீத வட்டி மானியத்தை அரையாண்டிற்கு ஒருமுறை சம்மந்தப்பட்ட வங்கிகளிடமிருந்து பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் நலனுக்காக தமிழக அரசால் பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டங்களை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post முதலமைச்சரின் பழங்குடியினர் தொழில் மேம்பாட்டு திட்டத்தில் பயன்பெற வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Collector ,Asha Ajith ,Tamil Nadu government ,Dravidian ,TADCO ,
× RELATED கோடைகால பயிற்சி முகாம் இன்று துவக்கம்