×

கதிர் அறுவடை செய்ய 500 இயந்திரங்கள் வருகை

திருவாடானை,ஜன.22: திருவாடானை பகுதியில் கதிர் அறுவடை செய்ய வெளி மாவட்டத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட அறுவடை இயந்திரங்கள் ஒரே சமயத்தில் வந்து குவிந்துள்ளன. மாவட்டத்தின் நெற்களஞ்சியம் என திருவாடானை தாலுகா அழைக்கப்படுகிறது. அதிக அளவில் இப்பகுதியில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. திருவாடானை வட்டாரத்தில் 27 ஆயிரம் ஹெக்டேரில் சம்பா பட்டத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை நடந்து வருகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பு கூலி ஆட்களை வைத்து மாத கணக்கில் நெல் அறுவடை நடைபெறும். சுமார் 20ஆண்டுகளாக நெல் அறுவடைக்கு அறுவடை இயந்திரம் பயன்படுத்தப்பட்டு அறுவடை பணி முடிக்கப்படுகிறது. இந்த அறுவடை இயந்திரம் சேலம், திருச்சி, ஆத்தூர் போன்ற பகுதிகளில் இருந்து திருவாடானை பகுதிக்கு 500க்கும் மேற்பட்ட இயந்திரங்கள் வந்து குவிந்துள்ளன.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஆட்களை வைத்து கூலி கொடுத்து அறுவடை செய்வதை விட இயந்திரங்கள் மூலம் அறுவடை செய்வதுதான் ஓரளவு மிச்சம் ஆகிறது. ஒவ்வொரு கிராமத்திற்கும் நான்கு முதல் ஐந்து அறுவடை இயந்திரங்கள் வந்துள்ளன. இப்பகுதியில் 500க்கும் அதிகமான வெளி மாவட்டத்தில் அறுவடை இயந்திரங்கள் வந்துள்ளன. கடந்த இரண்டு நாட்களாக சிறு மழை பெய்து விட்டது. இதனால் உரிய நேரத்தில் அறுவடை செய்யாமல் இயந்திரங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றனர்.

The post கதிர் அறுவடை செய்ய 500 இயந்திரங்கள் வருகை appeared first on Dinakaran.

Tags : Thiruvadanai ,Thiruvadan ,
× RELATED படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம்