×

ராஜாக்கமங்கலம் அருகே மாயமான பெண் சடலமாக மீட்பு

 

நாகர்கோவில், ஜன.22: ராஜாக்கமங்கலம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் செல்லம்மை (85). இவர் அந்த பகுதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார். தென்னை ஈக்கு எடுத்து வந்தார். கடந்த 18ம்தேதி, இவரது மகன் தங்க நாடார் (60) என்பவர் செல்லம்மைக்கு சாப்பாடு கொண்டு வந்தார். ஆனால் அவர் வீட்டில் இல்லை.

பல இடங்களில் தேடி வந்த நிலையில், நேற்று முன் தினம் அழகன்விளை கண்ணப்பன் என்பவரின் தென்னந்தோட்டத்தில் செல்லம்மை சடலமாக கிடந்தார். இது குறித்து ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சென்று செல்லம்மை உடலை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடல் நிலை சரியில்லாமல் செல்லம்மை இறந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post ராஜாக்கமங்கலம் அருகே மாயமான பெண் சடலமாக மீட்பு appeared first on Dinakaran.

Tags : Rajakamangalam ,Nagercoil ,Mgr. Chellammai ,Nagar ,Thanga Nadar ,
× RELATED நாகர்கோவிலில் கோதுமை ஏற்றி சென்ற லாரி சாலையில் கவிழ்ந்தது