×

விண்கலம் நிலவில் தரையிறங்கியது ஜப்பானுக்கு மோடி பாராட்டு

புதுடெல்லி: நிலவை ஆராய்வதற்காக ஜப்பான் அனுப்பிய ‘ஸ்லிம்’ விண்கலம், நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கியதாக ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம்(ஜாக்ஸா) தெரிவித்துள்ளது. நிலவை ஆராய்வதற்காக ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி மையம் கடந்த ஆண்டு செப்டம்பரில் ‘ஸ்லிம்’ எனும் லேண்டர் விண்கலத்தை விண்ணில் ஏவியது. நான்கு மாதங்களுக்கு மேலாக பயணித்த இந்த விண்கலம் நேற்று முன்தினம் இரவு நிலவில் தரையிறங்கியது. இதன் வாயிலாக நிலவுக்கு விண்கலம் அனுப்பிய நாடுகளின் பட்டியலில், ரஷ்யா, அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் இருந்த நிலையில் தற்போது ஜப்பானும் இணைந்துள்ளது.பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கி சாதனை படைத்த ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் மற்றும் பிரதமர் புமியோ கிஷிடாவுக்கு வாழ்த்துகள். விண்வெளி ஆராய்ச்சியில் ஜப்பானுடன் இணைந்து பணியாற்றுவதை இஸ்ரோ எதிர்நோக்கியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

The post விண்கலம் நிலவில் தரையிறங்கியது ஜப்பானுக்கு மோடி பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Modi ,Japan ,New Delhi ,Japan Aerospace Exploration Agency ,JAXA ,Japan Space Research Center ,
× RELATED ராஜஸ்தான் பிரசாரத்தில் வெறுப்பு...