×

கேலோ இந்தியா கூடைப்பந்து சண்டிகரை வீழ்த்தியது தமிழ்நாடு

கோவை: கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டித் தொடரின் மகளிர் கூடைப்பந்து போட்டியில், தமிழ்நாடு அணி 109-45 என்ற புள்ளி கணக்கில் சண்டிகர் அணியை வீழ்த்தியது. தமிழ்நாட்டின் 4 நகரங்களில் நடைபெறும் இந்த தொடரில், கோவை பிஎஸ்ஜி மருத்துவ கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் கூடைப்பந்து போட்டி ஜன. 21-25, தாங்டா விளையாட்டு போட்டி ஜன. 28-30 வரை நடக்கிறது. கோவையில் கேலோ இந்தியா போட்டியை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேற்று தொடங்கி வைத்தார். மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், கூடுதல் ஆட்சியர் ஸ்வேதா சுமன், வணிக வரித்துறை இணை ஆணையர் முர்கேந்தர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மகளிர் கூடைப்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி 109-45 என்ற புள்ளிக்கணக்கில் சண்டிகர் அணியை எளிதாக வீழ்த்தியது. முன்னதாக பஞ்சாப் மகளிர் அணி 88-25 என்ற புள்ளிக்கணக்கில் உத்தரபிரதேச அணியை வென்றது. ஆண்கள் பிரிவில் உத்தரபிரதேசம் 109-52 என்ற புள்ளிக்கணக்கில் மிசோரம் அணியையும், தமிழ்நாடு 99-72 என்ற புள்ளிக்கணக்கில் கர்நாடக அணியையும் வீழ்த்தின. இன்று 8 போட்டிகள் நடக்க உள்ளன. இதில், தமிழ்நாடு பெண்கள் அணி கேரளாவுடன் மாலை 4 மணிக்கும், தமிழ்நாடு ஆண்கள் அணி சண்டிகர் அணியுடன் மாலை 6 மணிக்கும் மோத உள்ளன.

The post கேலோ இந்தியா கூடைப்பந்து சண்டிகரை வீழ்த்தியது தமிழ்நாடு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Calo India Basketball ,Chandigarh ,Coimbatore ,Gallo India Youth Sports Tournament ,PSG Medical College ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...