×

கடும் எதிர்ப்பால் அரைநாள் விடுமுறை அறிவிப்பை திரும்ப பெற்றது எய்ம்ஸ்

புதுடெல்லி: அயோத்தியில்,நடைபெறும் ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி,டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்று(திங்கள்கிழமை) மதியம் 2.30 மணிவரை விடுமுறை அளிக்கப்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் நேற்றுமுன்தினம் அறிவித்தது.ஆனால் மருத்துவமனையின் அவசர சிகிச்சை உள்ளிட்ட முக்கியமான பணிகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. எய்ம்ஸ் நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு காங்கிரஸ்,சிவசேனா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. எய்ம்ஸ் நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து முந்தைய முடிவை மருத்துவ நிர்வாகம் திரும்ப பெற்றுள்ளது. இதுகுறித்து வெளிளயிடப்பட்ட அறிக்கையில்,நோயாளிகளுக்கு எந்த வித சிரமும் ஏற்படாத வகையில் மருத்துவமனையின் வெளிநோயாளிகள் பிரிவு இன்று வழக்கம் போல் செயல்படும் என தெரிவித்துள்ளது.

The post கடும் எதிர்ப்பால் அரைநாள் விடுமுறை அறிவிப்பை திரும்ப பெற்றது எய்ம்ஸ் appeared first on Dinakaran.

Tags : AIIMS ,NEW DELHI ,ADMINISTRATION ,DELHI ,RAMAR ,IOTHI ,Dinakaran ,
× RELATED இன்சுலின் வழங்க கோரிய மனு தள்ளுபடி...