×

போலி பாஸ்போர்ட் அமலாக்கத்துறை ரெய்டு

புதுடெல்லி: போலி விசா, பாஸ்போர்ட்டுகள் விவகாரத்தில் குஜராத்,டெல்லியில் அமலாக்கத்துறையினர் 2 நாள் நடத்திய சோதனையில் ரூ.1.5 கோடி இந்திய பணம், ரூ.21 வெளிநாட்டு கரன்சிகள் சிக்கின. போலி விசா,பாஸ்போர்ட்டுகளில் வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக ஆள்களை அனுப்பியதாக குஜராத்தை சேர்ந்த பரத்பாய் படேல், சரண்ஜித் சிங் மற்றும் சில ஏஜென்டுகள் மீது கடந்த 2022ம் ஆண்டு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.பரத் படேலை போலீசார் கைது செய்தனர். மோசடியில் தொடர்புடையவர்கள் மீது சட்ட விரோத பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்க துறை வழக்கு பதிவு செய்துள்ளது.இந்நிலையில், குஜராத்,டெல்லியில், கடந்த 2 நாள்களாக 20க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதில்,ரூ.15 கோடி பணம், ரூ.21 லட்சம் வெளிநாட்டு கரன்சிகள் மற்றும் டிஜிட்டல் ஆவணங்கள் சிக்கியதாக அமலாக்க இயக்குநரகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

The post போலி பாஸ்போர்ட் அமலாக்கத்துறை ரெய்டு appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Gujarat ,Delhi ,Bharatbhai Patel ,Saranjit ,Enforcement Department ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு