×

தமிழகத்தில் முதல்கட்டமாக ரூ.130 கோடியில் 828 நூலகங்களுக்கு விரைவில் இணைப்பு கட்டிட பணி

சென்னை: தமிழகத்தில் பொது நூலக இயக்கத்தின் கீழ் 4,658 நூலகங்கள் செயல்படுகின்றன. இதில் முதல் கட்டமாக 828 நூலகங்களுக்கு இணைப்புக் கட்டிடங்கள் கட்டப்படவுள்ளன. இதுவரை சொந்தக் கட்டிடம் இல்லாத நூலகங்களுக்கு முன்னுரிமை கொடுத்து இந்தக் கட்டிடம் கட்டப்படவுள்ளது.  ஏற்கனவே சொந்த கட்டிடத்தில் இயங்கும் நூலகத்தில் இட வசதி இருந்தால் கூடுதலாக புதிய கட்டிடம் கட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக ஒன்றிய கல்வி அமைச்சகத்திடம் பெறப்பட்ட கடன் ரூ.100 கோடி உள்ளதால் நூலகங்களுக்கான கட்டுமானப் பணிகள் இன்னும் ஓரிரு மாதங்களில் தொடங்கப்படவுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ஒன்றிய அரசு கடனுதவி இந்த ஆண்டு ரூ.200 கோடி அறிவித்து முதல்கட்டமாக ரூ.100 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

இதில் பொது நூலகத் துறை பங்களிப்பு 30 சதவீதம் சேர்த்து ரூ.130 கோடி மதிப்பில் பணிகள் தொடங்கப்படவுள்ளன. நூலகங்களில் 500 சதுர அடி அளவில் கட்டிடம் அமையும். அடுத்த சில மாதங்களில் மேலும் ரூ.100 கோடி விடுவிக்கப்பட்டவுடன் மொத்தம் ரூ.260 கோடி மதிப்பில் 828 நூலகங்களின் கட்டுமானப்பணி நிறைவு செய்யப்படும். நூலக வரி வசூல் மூலம் ஒன்றிய அரசு கடனை வட்டியின்றி திருப்பிச் செலுத்தி ஈடு செய்யப்படும் என்றனர்.

The post தமிழகத்தில் முதல்கட்டமாக ரூ.130 கோடியில் 828 நூலகங்களுக்கு விரைவில் இணைப்பு கட்டிட பணி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,CHENNAI ,Public Library Movement ,Dinakaran ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...