×

இந்திய ஏர் ஆம்புலன்சுக்கு அனுமதி தாமதம்; மூளை கட்டியால் பாதிக்கப்பட்ட சிறுவன் பலி: மாலத்தீவு அதிபர் மீது குற்றச்சாட்டு

மாலே: இந்திய டோர்னியர் விமானத்தை சிகிச்சைக்காக பயன்படுத்த அனுமதி மறுத்ததால் மாலத்தீவை சேர்ந்த 14 வயது சிறுவன் உயிரிழந்தார். இதற்கு அந்நாட்டு அதிபர்தான் காரண் என்று கூறப்படுகிறது. மாலத்தீவு நாட்டிற்கான அவசரகால தேவைக்காக, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தயாரித்த டோர்னியர் விமானத்தை இந்தியா வழங்கியது. அவசர சிகிச்சை உள்ளிட்ட காலங்களில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல இந்த விமானம் பயன்படுத்தப்பட்டது.

இந்நிலையில் மலேசியாவின் வில்மிங்டனில் இருந்து மாலத்தீவின் தலைநகரான மாலேக்கு மூளையில் ஏற்பட்ட கட்டியால் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுவன் அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த சிறுவனை உடனடியாக மலே மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏர் ஆம்புலன்ஸ் வசதியை ஏற்படுத்தி தர கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், ஏர் ஆம்புலன்சுக்கு அனுமதி கோரி 16 மணி நேரம் ஆகியும், விமான போக்குவரத்து அதிகாரிகள் எவ்வித பதிலும் அளிக்கவில்லை. நீண்ட இழுபறிக்கு பின்னர், மாலேவுக்கு சிறுவன் கொண்டு வரப்பட்டார். ஆனால் அந்த சிறுவனின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.

சிறுவன் இறந்ததைத் தொடர்ந்து, மலேயில்போராட்டங்கள் நடந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விமானத்துக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதே சிறுவனின் உயிரிழப்புக்கு காரணம் என்று குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். மேலும் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, இந்தியாவுக்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டை எடுத்துள்ளதால், இந்திய தயாரிப்பு விமானத்தை பயன்படுத்த தவிர்த்தாக கூறப்படுகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன் பிரதமர் மோடி லட்சத்தீவு சென்றார். இவரது லட்சத்தீவு பயணம் குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேர் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தனர். இதனால் இந்தியா – மாலத்தீவு இடையிலான உறவில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளதால் பிரச்னைகள் நீடிக்கிறது.

The post இந்திய ஏர் ஆம்புலன்சுக்கு அனுமதி தாமதம்; மூளை கட்டியால் பாதிக்கப்பட்ட சிறுவன் பலி: மாலத்தீவு அதிபர் மீது குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : MALAY ,MALDIVES ,President ,Hindustan Aeronautics Limited ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் மாலத்தீவில் ஆளும்...