×

ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளான விமானம் இந்திய விமானம் கிடையாது: ஒன்றிய விமான போக்குவரத்துத்துறை!

டெல்லி: ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளான விமானம் இந்திய விமானம் கிடையாது என ஒன்றிய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து மாஸ்கோ சென்ற பயணிகள் விமானம் ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு பகுதியில் உள்ள பதக்‌ஷான் மாகாணத்தில் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்திருந்தது. பதக்‌ஷான் மாகாணத்தின் சிபக் மாவட்டத்தில் உள்ள மலையில் மோதி விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருந்தது.

விபத்துக்குள்ளான விமானத்தில் எத்தனை பேர் பயணித்தார்கள், அவர்களின் நிலை குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளான விமானம் இந்திய விமானம் கிடையாது என ஒன்றிய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. விபத்துக்குள்ளானது மொராக்கோ நாட்டைச் சேர்ந்த சிறிய ரக விமானம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

The post ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளான விமானம் இந்திய விமானம் கிடையாது: ஒன்றிய விமான போக்குவரத்துத்துறை! appeared first on Dinakaran.

Tags : Afghanistan ,EU Department of Aviation ,Delhi ,EU aviation ministry ,India ,Moscow ,Badakhshan ,northeastern Afghanistan ,
× RELATED ஆப்கனில் கடும் வெள்ளம்: 33 பேர் பலி