×

கும்பாபிஷேக பிரச்னையில் பொதுமக்கள் சாலை மறியல்

சாயல்குடி, ஜன.21: சாயல்குடி மாரியம்மன் கோவில் தெருவில் அமைந்திருக்கும் மாரியம்மன் கோயிலில் கடந்த நான்கு ஆண்டுகளாக திருவிழா நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட இருந்தது. இந்த நிலையில், அந்த கோயிலில் வழிபாடு செய்யும் ஒரே சமூகத்தை சேர்ந்த இரண்டு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில், சாயல்குடி போலீசார் பாரபட்சமாக ஒரு தரப்புக்கு மட்டும் ஆதரவாக நடவடிக்கை எடுப்பதாக கூறியும், கும்பாபிஷேகத்தை நடத்த விடாமல் தடுப்பதாக கூறியும், அந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று திடீரென கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து மறியல் ஈடுபட்டனர். இதனால் கிழக்கு கடற்கரை சாலையின் இருபுறங்களிலும் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களோடு கடலாடி வருவாய் துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

The post கும்பாபிஷேக பிரச்னையில் பொதுமக்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Kumbabhishekam ,Chayalgudi ,Mariamman temple ,Mariamman Kovil street ,
× RELATED இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்