×

பாஜ காண்பது பகல் கனவு செல்லூர் ராஜூ பேச்சு

மதுரை, ஜன.21: தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி காண்பது பகல் கனவாகவே போகும் என மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார். எம்ஜிஆரின் 107 வதுபிறந்த நாள் பொதுக்கூட்டம், மதுரை மேற்கு தொகுதி அதிமுக சார்பில் பரவையில் நடைபெற்றது. இதற்கு பரவை பேரூர் கழக செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். பகுதி கழகச் செயலாளர்கள் கருப்பசாமி, முத்துவேல், சோலைராஜா முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சரான அதிமுக அமைப்புச் செயலாளர் செல்லூர் ராஜூ பேசுகையில், ‘‘எம்ஜிஆர் இருந்தாலும், மறைந்தாலும் அவர் பெயரை சொல்ல வேண்டும். அவர் போல யார் என்று ஊர் பேச வேண்டும் என்று பாடலுக்கு ஏற்றவாறு, அவர் மறைந்து 37 ஆண்டுகள் ஆனாலும், அவரது புகழ் நிலைத்திருக்கிறது. பாஜ ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதிமுக பின்னுக்கு சென்றுள்ளதாக கூறி வருகிறார்கள். அதிமுக வலுவான இயக்கம். தேர்தலில் பாஜ காண்பது பகல் கனவாகத்தான் போகும். தனது திரைப்படங்களின் மூலம் இளைஞர்களை நல்வழியில் கொண்டு சென்றவர் எம்.ஜி.ஆர். ஆனால், தற்போதைய நடிகர்கள் தங்களது படங்களில் துப்பாக்கி, கத்தி என்று இளைஞர்களை சீரழித்து வருகின்றனர்’’ என்றார்.

The post பாஜ காண்பது பகல் கனவு செல்லூர் ராஜூ பேச்சு appeared first on Dinakaran.

Tags : Baj ,Sellur Raju ,Madurai ,Former Minister ,Bharatiya Janata Party ,MGR ,Madurai West Constituency AIADMK ,
× RELATED ராகுல் காந்தியை புகழ்ந்த பதிவை நீக்கினார் செல்லூர் ராஜு